11-11-2005, 03:20 PM
[size=15]பிரான்ஸ் புதிதாகக் கொண்டு வரவுள்ள சட்டத்தின் வழி
கலவரத்தில் ஈடுபடுவோரை <b>குடியேறிகள் </b>என்று கூறி திருப்பி அனுப்ப நினைப்பதும்
சட்டத்தை தமக்கு சாதகமாக்க முயல்வதும்
பாரதூரமான விளைவுகளை ஐரோப்பாவுக்குள் ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
இவர்களது குடும்பங்கள் உண்மையிலேயே 2ம் உலக யுத்தத்துக்குப் பின்னர் இங்கு அழைத்து வரரப்பட்டு ஐரோப்பாவைக் கட்டி எழுப்ப ரத்தம் சிந்தியவர்கள் என்பதே சரி.
இவர்களது உழைப்பு இல்லாவிடில் இன்றைய ஐரோப்பா ஒரு சுவர்க்கமாக இருந்திருக்காது.
இவர்களை ஒத்த
இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஆணி வேராக இருக்கும் மலையக மக்களை நமக்கு விளங்கும் விதத்தில் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
ஆங்கிலேயரால் இலங்கையின் மலையகத்தை செழிப்பாக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டவர்களின் கதி
சிறிமா - சாத்திரி உடன்படிக்கை மூலம் நாட்டை விட்டு வெளியேற்றியதே.
அவர்கள் இன்று தமிழகத்தில் கேட்பாரற்ற நிலை வாழ்வு வாழ்கிறார்கள்.
மலையகத்தில் இருப்போரில் பெரும்பாலாக
மக்கள் கூட லயன்களினல் கீழ்த்தரமான வாழ்வோடு போராடுகிறார்கள்.
இவர்கள் இன்றும் இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்.
இலங்கையரெனும் உரிமை பிறப்பு சான்றிதழில் கூட இல்லை.
இவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே குறிப்பிடப்படுகிறார்கள்.
இவர்களது வாக்குகளைப் பறித்தவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் என்பது வேதனைக்குரிய உண்மை.
இது வெட்கப்பட வேண்டியதாகவே கருதுகிறேன்.
இவர்களுக்காவது இன்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
ஐரோப்பாவில் வாழும் இந்த குடியேறிகளின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஒரு அமைப்போ அல்லது பாராளுமன்ற அங்கத்துவமோ இல்லாதது
குடியேறிகளின் குழந்தைகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வைத்திருக்கிறது.
இங்கு பிறந்தவர்களுக்கு இது அவர்களது தாயகம்.
இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இது பற்றிய ஒரு சில தெளிவான விளக்கத்தை நாளை எழுதுகிறேன்.
இவ் வன்முறைகள் நடைபெறும் தருணத்தில்
பிரிட்டனில் பிரதமர் டோனி பிளேர் அறிமுகப்படுத்த விரும்பிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்கள் தொடர்பில் அவர் தனது ஆட்சியில் முதல் முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலை
நல்லதொரு திருப்பமாக இருப்பதாகவே படுகிறது.
[quote]<b>பிரிட்டிஷ் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி</b>
பிரிட்டனில் பிரதமர் டோனி பிளேர் அறிமுகப்படுத்த விரும்பிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்கள் தொடர்பில் அவர் தனது ஆட்சியில் முதல் முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இன்று தனது மூத்த அமைச்சர்களை பிளேர் சந்தித்தார்.
தேசம் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தலின் தன்மை குறித்து மக்களுக்கும் நாடாளும்னறத்திற்கும் இடையில் வருந்தத்தக்க கருத்து வேற்றுமை ஒன்று உருவாகிவிட்டது என்று பிளேர் அவர்கள் மத்தியில் வாதிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூத்த அமைச்சர்கள் இடையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அவர்கள் நடந்ததை நினைத்து வருந்துகிறார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும்கூட தெரியவில்லை. மாறாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் விடாப்பிடியாக இருப்பது சரிதான் என்று அமைச்சரவை முழுமையிலும் ஒரேமாதிரியான கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் நேற்று அரசு அடைந்த தோல்வியின் அளவு கண்டு பலர் அடைந்த ஆச்சரியத்தை அதிர்ச்சியை பூசிமெழுகத்தான் தற்போது அமைச்சர் மத்தியில் இப்படி நம்பிக்கை பீறிடுகிறது என்று கூறப்படுகிறது.
தனது கட்சிக்குள் எளிதில் ஒத்துப்போகாதவர்களைப் பேசி இணங்கவைக்கும் பிளேரின் பெரிய வல்லமை இவ்விஷயத்தில் பயனற்று போயிருக்கின்ற நிலையில் மேலும் சர்ச்சைக்குரிய மற்ற சட்டங்களை நாடாளுமன்றத்தில் முயன்று நிறைவேற்ற பிளேரால் முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தான் விரும்பி விலகுவதற்கு முன்னரே பிளேர் பதவிவிலக வேண்டும் ஏனெனில் அவர் அந்த அளவுக்கு பலவீனமடைந்துவிட்டார் என சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சர்ச்சைக்குரிய மற்ற பகுதிகள் மீது அடுத்த வருடம் நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடக்கும்வரை பிளேர் நிலைமையை சமாளித்துக்கொள்ளலாம்.
-BBC tamil
பிரான்சின் தாக்கங்கள் ஜெர்மனிக்கும் தாவியிருக்கிறது.
இந்நிலையில்
பிரான்சில் உள்ள அரசியல்வாதிகள்
கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில்
எதிர்கால செயல்கள் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமுமில்லை.
ஐரோப்பாவின் நாசத்துக்கு அல்கொய்தா போன்ற பயங்கரவாதங்கள் (அமெரிக்காவும்தான்?)
ஊடறுத்து செயல்பட வழி வகுத்தால் அதை தணிக்க எந்த ஜென்மம் எடுத்தாலும் முடியாது போகலாம்.
இதுவே மிகப் பயங்கரமானது.
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.........
-அஜீவன்