Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிசில் தொடரும் கலவரங்கள்
#19
<img src='http://www.puthumai.com/images/stories/ajg3/image072.jpg' border='0' alt='user posted image'>
<b>தீக்குளிக்கின்றதா நாடு? </b>
-ஏஜேஜி

12 இரவுகளை வன்முறைகள் கண்டுவிட்டன.
ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 5,873 கார்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. 1,500 பேரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றார்கள். 17 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. தீயணைப்பில் தீவிரமாக ஈடுபட்ட பொலீஸ் படையினரில், 120 பேர் வரையில் காயப்பட்டிருக்கிறார்கள்.
ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை இன்று எழுதும்போது பிரான்ஸ் நாட்டில் வெடித்து, 12வது நாளைத் தொட்டுக் கொண்டிருக்கும், இன்றைய நிலையில் கிடைத்த புள்ளி விபரங்கள்.
பிரான்ஸ் நாட்டில் என்னதான் நடக்கின்றது? இன்னும் எத்தனை பேர் கொல்லப்படப் போகின்றார்கள்? எத்தனை வாகனங்கள் தீக்குளிக்கப் போகின்றன?

இரண்டு இளைஞர்கள், மின்சாரத்தால் தாக்குண்டு இறந்த நிகழ்வுதான், இந்த வன்முறைகளை விதைத்திருக்கின்றன. பொலீஸார் இந்த இரு இளைஞர்களையும் துரத்திச் சென்றபோது, தப்பியோட எத்தனித்த இளைஞர்கள், மின்சார உற்பத்தி நிலையத்துள் புகுந்து மறைந்திருந்த சமயம், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் பொலீஸாரோ நாம் அப்படி யாரையும் துரத்தவில்லை என்று அடியோடு மறுக்கின்றார்கள்.

நாடெங்கும் வெடித்து, வளரும் இந்த வன்முறைகளை அடக்க இறுதி ஆயுதம் கையாளப்பட்டிருக்கின்றது. உள்துறை அமைச்சர், நாட்டின் நகரங்கள், பட்டினங்களெங்கும் ஊரட்ஙகு சட்டத்தை அமுல்செய்யும்படி, அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் இந்த வன்முறை சற்று அடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஏனைய நகரங்களில் நிலைமையில் மாற்றம் தெரிவதாக இல்லை. அரபு இனத்தவர்களும், ஆபிரிக்க இனத்தவர்களும் அதிகமாக வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு வாழ்கின்ற பிராந்தியங்களிலேயே, இந்த இரவுக் கலவரங்கள் வெடித்துள்ளன. இனவேறுபாடு பார்க்கப்பட்டு நாம் ஒதுக்கப்பட்டு வருகின்றோம் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

1955இல் அமுலுக்கு வந்த ஒரு சட்டததிற்கு அமையும் விதத்தில்தான், ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1954-1962 காலகட்டத்தில், அல்ஜீரியா, பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற, போர் தொடுத்த வேளை அல்ஜீரியாவில் பிறப்பிக்கப்பட்ட சட்டமே இது. இந்தத் தடவை, அவசரம் அவசரமாக கட்நத செவ்வாயன்று கூட்டப்பட்ட பாராளமன்றத்தில், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்டிருந்த 1500 பொலீஸ் அதிகாரிகளுக்கு கைகொடுப்பதற்காக, மேலும் 8000 பேர் அனுப்பப்பட்டுள்ளார்கள். இராணுவம் தற்போதைய நிலையில் அனுபப்பட மாட்டாது என்று சொல்லப்படுகின்றது.

கடந்த திங்களன்று இரவு வெடித்த வன்முறையில் 1000க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயூட்டப்பட்டிருக்கின்றன. பல கட்டடங்களும், நெருப்பில் எரிந்து அழிக்கப்பட்டுள்ளன. Toulouse நகரின் தென் பிராந்தியத்தில், ஒரு பஸ் வண்டி எரிக்கப்பட்டுள்ளது. Lille
என்ற நகரின் வட பிராந்தியத்திலும் வெடித்த வன்மறையிலும் வாகனங்கள் தீக்கிரையாகி இருக்கின்றன. Nord-Pas-de-Calais , Picardie பிராந்தியங்களையும் வன்முறைகள் தாக்கி இருக்கின்றன.

பாலர் பாடசாலை, உயர் நிலைப் பாடசாலை, எரிபொருள் நிரப்பு நிலையம் என்று பற்பல எரித்து நாசமாக்கப்ட்டுள்ளன.

இங்கு வெளிநாட்டவர்கள், ஜாக்கிரதையாக இருக்கும்படி, அந்தந்த நாட்டு அரசுகளால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத்தின் தலைநகரிலுள்ள, புகையிரத நிலையமொன்றில் ஐந்டது கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. பேர்லின் நகரிலும் எரியுண்ட ஐந்து கார்கள் குறித்து ஜேர்மன் பொலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

கடந்த மாதம் 27 ந்திகதிதான் இந்த வன்முறைகள் ஆரம்பித்து, இப்பொழுது நாடெங்கும் பரவியிருக்கின்றன. மின்சாரத் தாக்குதலால் எரியுண்ட இரு இளைஞர்களில் இருவருமே ஆபிரிக்க வழி வந்தவர்கள். இவர்களுக்கு வயதும் அதிகமில்லை. ஒருவனுக்கு வயது 15. இரண்டாமவனுக்கு வயது 17. இந்த இரு இளைஞர்களினதும் படங்களுடன், அதற்குக் கீழ் சமாதானமாக ஓய்வெடுங்கள் எனறு பொருள்படும்படி வாசகங்களை எழுதி, தங்கள் கைத்தொலைபேசிகள் மூலம், ஆளுக்கு ஆள் இங்கே அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாம் அணிந்துள்ள மேலாடையில் மரணம், வெறுமனே விடப்பட்டு விடாது என்ற பொருள்படும்படி வாசகங்களை எழுதியபடி திரிகின்றார்கள். மரணம் என்பது உணர்ச்சிகளைக் கிளறக் கூடியதுதான். ஆனால் இங்கே நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்று காலங்காலமாக மனதுள் புதைந்து கிடந்த இவர்கள் உணர்ச்சிகளே வெடித்து, கலவரமாக பிரசவமாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றார்கள்.

பல அரபு, ஆபிரிக்க வழிவந்த இளைஞர்கள், நேர்முகப் பரீட்சைகளில் சமூகமளித்து, தாம் ஒதுக்கப்பட்ட விரக்தியில் இங்கு பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலையில்லாத பல இனைஞர்கள் ஒன்றாக வாழும்போது, அதன் விளைவுகள் பொதுவாக வன்முறை வெடிப்பாகவே இருப்பதுண்டு.
அரபு நாட்டவர்களும், ஆபிரிக்க நாட்டவர்களும் வாழும் பிராந்தியங்கள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்ட்டு வருகின்றன என்று இவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, முகம் கொடுத்தாக வேண்டிய இகட்டான நிலைக்கு, பிரெஞ் அரசு தள்ளப்பட்டிருக்கின்றது.

- நன்றி : புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:42 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:36 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:39 AM
[No subject] - by RaMa - 11-05-2005, 05:21 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 10:45 AM
[No subject] - by AJeevan - 11-06-2005, 12:26 AM
[No subject] - by AJeevan - 11-08-2005, 08:35 PM
[No subject] - by VERNON - 11-08-2005, 11:06 PM
[No subject] - by sabi - 11-08-2005, 11:14 PM
[No subject] - by shobana - 11-08-2005, 11:40 PM
[No subject] - by sathiri - 11-08-2005, 11:40 PM
[No subject] - by VERNON - 11-09-2005, 10:11 AM
[No subject] - by Netfriend - 11-09-2005, 10:56 AM
[No subject] - by AJeevan - 11-09-2005, 09:07 PM
[No subject] - by விது - 11-09-2005, 11:23 PM
[No subject] - by Mathan - 11-10-2005, 09:25 AM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:15 PM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)