Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். சிறை உடைத்து தப்பினர் இருவர்: தப்பியது விடுதலைப் புலிக
#1
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சிறைச்சாலை உடைக்கப்பட்டு இரு சிறைக்கைதிகள் தப்பியுள்ளனர்.


இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந்த சிறை உடைப்புச் சம்பவம் நடந்தது.

சிறையில் விளக்கமறியலில் இருந்த இருவருடன் வெளியிலிருந்து உள்நுழைந்த இருவரும் இணைந்து கைத்துப்பாக்கி மூலம் சிறைத்துறை அதிகாரிகளை மிரட்டி சிறையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் கொழும்புத்துறை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் 4 பேரும் தப்பிச் சென்றனர்.

காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மணாளன் மற்றும் பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் கைது செயப்பட்ட கமல் ஆகியோர் சிறையை உடைத்துத் தப்பியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தப்பிய இருவர் மீதும் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரைவில் விசாரணை நடைபெற இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்றவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து சிறைப் பகுதியில் கூடுதலாக சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=21610
Reply


Messages In This Thread
யாழ். சிறை உடைத்து தப்பினர் இருவர்: தப்பியது விடுதலைப் புலிக - by adsharan - 11-11-2005, 03:06 PM
[No subject] - by வன்னியன் - 11-11-2005, 03:50 PM
[No subject] - by Thala - 11-11-2005, 05:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)