11-11-2005, 07:00 AM
<img src='http://img362.imageshack.us/img362/4084/ki9co.gif' border='0' alt='user posted image'>
இந்த வருடத்திற்குரிய (2005) உடற்கூற்றியல் (Physiology) அல்லது மருத்துவத்துறைக்குரிய (Medicine) நோபல் பரிசானது குறிப்பிடத்தக்கதும் காத்திராப்பிரகாரம் (Unexpected) மேற்கொள்ளப்பட்டதுமான ஒரு கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
1982ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அக் கண்டுபிடிப்பானது 'அல்சர்' எனப் பொதுவாக எமது மக்களால் அறியப்பட்ட இரைப்பை அழற்சிக்கும் (Gastritis) குடற்புண்ணிற்கும் (Peptic ulcer disease) காரணியாக 'ஹெலிக்கோபக்ரர் பைலோரி' (Helicobacter pylori) என்ற பக்ரீரியாவே விளங்குகிறது என்ற அரிய உண்மையை மருத்துவ உலகிற்கு வெளிப்படுத்தியது.
1937 ல் அவுஸ்த்திரேலியாவின் பேர்த் (Perth) என்ற இடத்தில் பிறந்தவரான றொபின் வாரென் (Robin Warren) என்ற உடல்நோயியல் நிபுணர் ( Pathologist) நோயாளிகளின் இரைப்பையின் கீழ்ப்பாகத்திலிருந்து (Antrum) எடுக்கப்பட்ட இழையமாதிரிகளில் (Biopsies) 50 வீதமானோரின் மாதிரிகளில் சிறிய வளைந்த நுண்கிருமிகள் கூட்டமாகச் சேர்ந்திருப்பதை (small curved bacteria colonizing) அவதானித்தார். அவ்வாறு நுண்கிருமிகள் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றிற்கருகிலுள்ள இரைப்பையின் சீதத்தில் (Gastric mucosa) அழற்சிக்குரிய அறிகுறிகள் (Signs of inflammation) தென்பட்டதையும் அவர் கண்ணுற்றார்
1951ம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவில் பிறந்த இளம் வைத்திய நிபுணரான பாரி மாஷல் (Barry Marshall) வாரெனின் மேற்படி அவதானிப்புகளில் நாட்டம்கொண்டு அவருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டார்.
இருவருமாக 100 நோயாளிகளின் இழைய மாதிரிகளைப் பெற்று ஆய்வுசெய்தனர். பல தடவை அவர்கள் முயன்றதன் பலனாக மாஷல் அந்தக்காலத்தில் என்னவென்றே தெரியாதிருந்த (Unknown bacterial species) -பிற்காலத்தில் 'ஹெலிக்கோபக்ரர் பைலோரி' எனக் குறிப்பிடப்பட்ட- அந்த நுண்ணுயிர்களை ஆய்வுகூடத்தில் வளர்த்தெடுப்பதில் (Cultivating) வெற்றிகண்டார்.
இரைப்பை அழற்சி, இரப்பைப் புண் (Gastric ulcer) அல்லது முன்சிறுகுடற் புண் (Duodenal ulcer) என்பவற்றால் அவதியுற்றவர்களில் அனேகமாக அனைத்து நோயாளிகளினதும் இரைப்பை இழைய மாதிரிகளில் மேற்படி நுண்ணுயிர் இருப்பதை மருத்துவர்கள் இருவரும் கூட்டாக அவதானித்தனர். இந்த ஆய்வு முடிவின் பிரகாரம் இவர்கள் இருவரும் 'ஹெலிக்கோபக்ரர்' பைலோரியே இரைப்பை அழற்சிஇ இரைப்பை மற்றும் முன்சிறுகுடற் புண் என்பவற்றின் தோற்றுவாயாக (Aetiology) உள்ளது என முன்மொழிந்தனர்.
மார்ஷல் மற்றும் வாரெனின் இந்தக் முன்னோடிக் கண்டுபிடிப்பின் விளைவாக ஒரு காலத்தில் நாட்பட்ட (Chronic), மீண்டும் மீண்டும் தாக்கும் (Frequently relapsed) ஒரு நோயாகக் காணப்பட்ட குடற்புண்ணை, குறுகிய காலத்திற்கு நுண்ணுயிரெதிரிகளுடன் ( Antibiotics) அமிலச் சுரப்பினை நிரோதிக்கும் மருந்துகளையும் (Acid secretion inhibitors) சேர்த்து உட்கொள்வதன்மூலம் அனேகமாக நிரந்தரமாகவே குணமாக்கிவிடக்கூடிய நிலை இன்று உருவாகிவிட்டது.
<img src='http://img362.imageshack.us/img362/1308/helicobactertam4kh.jpg' border='0' alt='user posted image'>
1982ல் மார்ஷல் மற்றும் வாரென் ஆகியோரால் ஹெலிக்கோபக்ரர் பைலோரி கண்டுபிடிக்கப்பட்டபோது, குடற்புண்ணைத் தோற்றுவிப்பதில் மனஅழுத்தமும் (Stress) ஒருவரது வாழ்க்கை முறையும் (Life style) பெரும் பங்குவகிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது 90வீதமான முன்சிறுகுடற் புண்ணிற்கும் 80 வீதமான இரைப்பைப் புண்ணிற்கும் காரணியாக ஹெலிக்கோபக்ரர் பைலோரி உள்ளமை உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
<img src='http://img362.imageshack.us/img362/4160/2005n3to.jpg' border='0' alt='user posted image'> மருத்துவர்கள் மாஷல் மற்றும் வாரென் ஆகியோர் நோபல் பரிசு கிடைத்தபிற்பாடு அதனைக் கொண்டாடும் தோற்றம்.
<img src='http://img362.imageshack.us/img362/8326/19845cq.jpg' border='0' alt='user posted image'> 1984ல் மருத்துவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் இருக்கும் காட்சி
இந்த ஹெலிக்கோபக்ரர் பைலோரியானது உலக மனிதக் குடித்தொகையின் 50 வீதமானவர்களது இரைப்பையில் காணப்படுகிறது. இத்தொற்றானது வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்களில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், வளர்முக நாடுகளில் அனேகமாக அனைவரிலும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
<b>நன்றி:</b> தினக்குரல்
<b>மூலம்:</b>நோபல் பரிசுக் குழுவினது அறிக்கையின் ரஷ்யமொழி வடிவம் - நியூஸ்று இணையச் செய்திச்சேவை (www.newsru.com)
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)