11-10-2005, 09:24 PM
இன்னும் பயம் எனக்கு
தயவு செய்து என்னை
தனிமையில் விட்டு விடு
கசங்கிய இதயத்திலே
இன்னும்
உயிர்ப்போடு இருப்பது
எனது நினைவுகள்
மட்டுமே
வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை
எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு
தயவு செய்து என்னை
தனிமையில் விட்டு விடு
கசங்கிய இதயத்திலே
இன்னும்
உயிர்ப்போடு இருப்பது
எனது நினைவுகள்
மட்டுமே
வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை
எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு

