Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அசின் - நயன்தாரா - த்ரிஷா - மோதல்கள்!
#1
அசின் - நயன்தாரா - த்ரிஷா - மோதல்கள்!


முன்பு சிம்ரனுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே நடந்த நம்பர் ஒன் போட்டி இப்போது அசினுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் நடந்து வருகிறது.
இத்தனைக்கும் இந்த இருவருமே கேரள சேச்சிகள். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் கூட மூணு ஜென்மத்து பங்காளி, பகையாளி மாதிரி முகத்தை ஒரு வெட்டு வெட்டி வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சென்றதெல்லாம் பழை கதை.

நீயா, நானா ஒரு கை பார்த்துவிடுவோம் என்று இப்பொழுது கஜினி படத்தில் சூர்யா ஜோடியாக நடிட்ககும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கச்சைக்கட்டி கவர்ச்சி காட்டி களம் இறங்கிவிட்டனர்.

அதிலும் நயன்தாரா ஒரு படி மேலே போய் ஒரு பாடல் காட்சியில் டூ பீஸில் கலக்கோகலக்கென்று கலக்குகிறார். இதைப் பார்த்த கோலிவுட் புள்ளிகள் எல்லோரும் தாவாங்கட்டையில் கைவைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர் என்றால் பாருங்கள்.

இரு ஒரு புறமிருக்க... த்ரிஷாவுக்கும் அசினுக்கும் இடையேயும் குடுமிப்பிடி நடந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் செம பிஸியாக இருக்கும் த்ரிஷா, தமிழில் முக்கியமான படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார்.


விஜய்யின் சொந்தப்படமான ஆதியிலும், சூர்யாவின்ஆறுவிலும் ஏ.எம். ரத்னம் பண்ணப்போகிற விக்ரம் படத்திலும் ஜோடி சேருகிறார் திரிஷா.

இது அசினுக்கு டென்ஷனை ஏற்படுத்திவிட்டது. இதனால் த்ரிஷாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு தரும் எம்.எஸ். ராஜு, ஏ.எம். ரத்னம் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோரை சென்று சந்தித்து எனக்கும் சான்ஸ் கொடுங்கள் எறு கேட்டிருக்கிறார்.

இப்போதைக்கு இருக்கிற எல்லா மெயின் ஹீரோக்களுடனும் நடிப்பது அசின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஒரு புதுமுகம் போல் வாய்ப்புகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார் அசின்.
Reply


Messages In This Thread
அசின் - நயன்தாரா - த்ரிஷா - மோதல்கள்! - by orutamilan - 11-10-2005, 03:08 PM
[No subject] - by Birundan - 11-10-2005, 03:14 PM
[No subject] - by shanmuhi - 11-10-2005, 03:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)