Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலக்கியத்தியல் அறிவியல்
#7
[b] தமிழில் அறிவியல்

Metal என்னும் சொல்லுக்கு தூய தமிழில் மாழை என்று பெயர். இதனை உலோகம் என்று வடமொழியில் அழைக்கின்றனர்; உலோகம்
என்ற வடச்சொல்லைச் சேர்த்துக் கொண்டு மாழை என்ற தூய தமிழ்ச் சொல்லை நாம் புறக்கணித்திருக்கிறோம்; உலோகம்
என்பதைவிட மாழை என்பதே பொருள் பொதிந்த சொல்லாகும். இருண்மை தன்மை பெற்றதால் இதற்கு மாழை என்ற பெயர்
வந்தது.

மால் = கருமை
மால் - மாழ் - மாழை

தமிழர் நாகரிகமுற்ற பழங்காலத்திலேயே மாழைப் பொருள்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பாவணர் கூற்றுப்படி தமிழரால் முதன்
முதலில் கண்டுப்டிக்கப்பட்ட மாழை பொன்னேயாகும். எனவே ஏனைய மாழைகட்கும் பொன் என்பது பொதுப் பெயராயிற்று . இதனால்,
செம்பினை செம்பொன் என்றும், வெள்ளியை வெண்பொன் என்றும், இரும்பினை இரும்பொன் என்றும் வழங்கினர். பொன் பொதுப்
பெயராகவும் விளங்கிய கரணியத்தால் மாழை பொன்னம் என்றும் அழைக்கபெற்றது.

அறிவியல் ஆய்வில் பொன்னங்களை அல்லது மாழைகளை கூறுபடுத்திப்பார்க்கின்ற பொழுது, அவற்றை அளையங்களாகவும்(ALOI)
தனிமங்களாகவும்(Element) சேர்மங்களாகவும் பகுத்தமைத்தனர்.

ஒரு வகையான அணுக்களைக் கொண்டே பொன்மங்களும் அன்மங்களும் தனிமம் என்ப்பட்டன.

element - தனிமம்
metal - பொன்மம் / மாழை
non metal - அன்மம்

தனிமங்கள் தொடர்பான அட்டவணையைத் தனிம அட்டவணை(Periodic table) என்போம்; தனிம அட்டவணையில் இடம் பெற்றுள்ள
பெரும்பாலான தனிமங்களுக்குத் தமிழில் பெயர் பண்டைத் தமிழரால் அமைக்கப் பெற்றுள்ளது.

பூதியல் அறிஞர்(Physieists) இல.க இரத்தினவேல் என்பவர் இது தொடர்பான ஆய்வுகள் பலவற்றைச் செய்து தனிமப்பட்டியலையே
உருவாக்கியிருக்கின்றார். அதில் இடம் பெற்றுள்ள தனிமப் பெயர்களைக் காண்போம் :


Xenon - அணுகன், வளிமண்டலத்தில் உள்ள அணுவளவு உள்ள அருவளி

Americium - அமெரிசியம், அமெரிக்காவில் செயற்கையாகப் பெறப்பட்ட தனிமம்.

Plutonium - அயலாம், அயலாயுள்ள கோளின் பெயரால் அமைந்த தனிமம்

Rubidium - அர்மிமம்

Rhodium - அரத்தியம் செந்நிற(rose) உப்புக்களாய் அமையும்.

Dysprosium - அரியம், இம்மாழையைப் பெறுதல் அரிது.

Anthanum - அருங்கனியம் முதல் அருங்கனி (Rare earth).

Indium - அவுரியம், நிறமாலையில்(spectrum) இரு நிறவரிகள் உள்ள மாழை.

Aluminium - அளமியம், அளம் (Eng. Alum > Latin. Alumin டேவி(Davy) Aluminium என்றே பெயரிட்டார் )

Radon - ஆரகன் : ஆரை > L.radius > radium, ray, Radium emanation

Tantalum - இஞ்சாயம் : நீரை உறிஞ்சாத மாழை, இஞ்சுதல் - உள்ளிழுத்தல்.

Thorium - இடியம் : காண்டி நேவிய இடிக்கடவுள்(Thor)

Ytterbium - இத்தெர்பியம் ஏனையிரு தனிமங்கள் எர்பியம், தெர்பியம்

Mercry - இதரம், பழந்தமிழ் வழக்கு

Neodymium - இரட்டியம், அருங்கனியத்தின் சோடி இரட்டியத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதுத்தனிமம்.

Rhenium - இரினியம், இரைன் யாறு (L.Rhein)

Iron - இரும்பு, இரு(ம்பொன்)ன் > (As.Iren - இரும்பு = கரியமாழை.

Illinium - இல்லினியம் : இல்லினாய்சு(Illinois)ப் பல்கலைக்கழகத்தில் காணப்பெற்றது.

Lawrencium - இலாரன்சியம் : அறிஞர் இலாரன்சு பெயரால் அமைந்தது.

Argon - இலியன் : செயல் இலி (G.K Argos - Inactive)

Tungsten - இழையம் : மின் விளக்கின் இழைகளாகப் பயன்படும் மாழை.

Ruthenium - உருத்தீனியம் : உருத்தீனியா(L.Ruthenia)

Sodium - உவர்மம், (Natrium) உவர்க்கும் உணப்பில் உள்ள மாழை.

Iriddium - உறுதியம் : உறுதியான முனைகளுக்குப் பயன்படும் மாழை.


நன்றி : - இரா.திருமாவளவன் -


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-07-2005, 02:24 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 08:10 AM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:23 PM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:53 PM
[No subject] - by கரிகாலன் - 11-10-2005, 03:08 PM
[No subject] - by Rasikai - 11-10-2005, 08:34 PM
[No subject] - by ப்ரியசகி - 11-20-2005, 08:41 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 03:14 PM
[No subject] - by thiru - 11-23-2005, 03:06 PM
[No subject] - by Rasikai - 11-24-2005, 12:32 AM
[No subject] - by Selvamuthu - 11-24-2005, 12:58 AM
[No subject] - by RaMa - 11-24-2005, 07:23 AM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 07:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)