11-10-2005, 01:23 PM
karikalan Wrote:ஒரு சின்ன சந்தேகம்.
திருமணம் ஒருவரின்(ஆண்/பெண்) வாழ்க்கையில் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா
தம்பி இவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்தகேள்வியை கேக்க வெளிக்கிட்டிருக்கிறீர் எங்கடை உழைப்பிலை மண்ணைப் போடவேணுமெண்டு என்ன வேண்டுதலோ தெரியேலை. . . முன்னைய எங்கடை காலங்களில் திருமணம் வாழ்க்கையில் குறிப்பிட்ட வயசில் இருபாலருக்கும் நடந்திட வேணும் அல்லாவிட்டால் ஊரில் அவர்களைப் பற்றி நெளித்துக் கதைப்பதே பொழுபோக்காவிடும் ஆனால் இப்பத்தைய இயந்திர வாழ்க்கையில் திருமணத்தை காலம் தாழ்த்தி செய்கிறார்கள் அல்லாமல் முற்றாக அதை தேவையில்லை எனும் நிலையில் எமது இனம் இல்லைஎண்டுதான் சொல்லவேண்டும் இப்போதைய சீதனப்பிரச்சனை குடும்பப் பொறுப்பு மேற்படிப்புகள் காரணமாக சிலபேருக்கு திருமணங்கள் தள்ளிப் போகிறது அதுக்காக அவர்கள் திருமணம் தேவையில்லை எண்டு சொல்லவில்லை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் தங்களுக்கொண்டு ஒரு குடும்பத்தை அமைக்க விரும்புகிறார்கள் இதே கேள்வியை எங்கடைஅப்பா அம்மா கேட்டு திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் பதிலெழுதுற வில்லங்கம் எங்களுக்கு வந்திருக்காது என்ன.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

