Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். நிதி சேகரிப்பு செய்திகள்: சுரேஸ் பிரேமச்சந்திரன் மறுப்
#1
யாழ். நிதி சேகரிப்பு செய்திகள்: சுரேஸ் பிரேமச்சந்திரன் மறுப்பு!!
[வியாழக்கிழமை, 10 நவம்பர் 2005, 16:05 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
யாழ். வர்த்தகர்களிடம் நிதி சேகரிப்பதாக ஊடகங்கள் மற்றும் சில இணையதளங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளரிடம் அவர் கூறியதாவது:

இது மிகவும் மோசமான முறையில் சோடித்து எழுதப்பட்ட விடயம். யாழ்ப்பாணத்தில் நானோ எனது கட்சியைச் சேர்ந்த எவருமோ துப்பாக்கியுடனோ, துப்பாக்கி இல்லாமலோ எந்த வர்த்தகர்களிடம் நாங்கள் எந்த உதவிகளும் கேட்கச்சொல்லவில்லை என்பது முதலாவது விடயம்.

யாழ். வர்த்தக சங்கத் தலைவரிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் சென்று மிரட்டினார் என்பது பற்றி வர்த்தக சங்கத் தலைவரிடம் கேட்கவேண்டும்.

யாழ். வர்த்த சங்கத் தலைவரை நேரிலோ, தொலைபேசிலோ கதைத்தில்லை. ஆகவே உண்மையாகப் பார்க்கும் போது இது தொடர்பில் வெளிவந்த செய்தியானது எனக்கு சேறுபூசும் வகையில் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தப்பட்ட விடயமாகத்தான் தோன்றுகின்றது.

அந்தவகையில் நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றதாகக் கூறி சோடிக்கப்பட்ட முறையில் இணையத்தளத்திலும், அதனைத் தொடர்ந்து வேறு சில ஊடகங்களிலும் வெளிவந்துள்ள செய்தியானது முழுக்க முழுக்க பொய்யானதும் ஒரு புனை கதைபோல் எழுதி எனக்கு எதிரான சேறுபூசுதல் வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் இன்று காலை எனது வீட்டுக்கு இரண்டு கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.

ஆகவே இது திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்ற விடயங்களாகவுள்ளன. இச் சம்பவங்களானது சுரேஸ் பிரேமச்சந்திரன் என்ற தனிமனினுக்கு அப்பால் அவர் செல்கின்ற பாதை, கருத்துக்களுக்கு எதிராக இவற்றில் இருந்து திசை திருப்பவேண்டும் என்பதற்காக ஒரு மிரட்டல் முறையில் விடயங்கள் இடம்பெறுவதாக கருதுகிறேன்.

ஆகவே சர்வதேச தமிழர்களிடமும் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களிடமும் கோருவது என்னவெனில் எந்தவித சம்பவங்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை.

ஆனால் திட்டமிட்ட முறையில் சேறடிக்கும் வகையில் மிரட்டுகின்ற அடிப்படையில் வருகின்ற செய்திகளை நம்பவேண்டாம். எமக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் இவை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்றார் அவர்.

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
யாழ். நிதி சேகரிப்பு செய்திகள்: சுரேஸ் பிரேமச்சந்திரன் மறுப் - by வினித் - 11-10-2005, 12:26 PM
[No subject] - by வினித் - 11-10-2005, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)