11-10-2005, 12:07 PM
<b>தேர்தலில் தமிழர்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை: சு.ப. தமிழ்ச்செல்வனுடனான சந்திப்புக்குபின் இரா. சம்பந்தன் அறிவிப்பு!!
[வியாழக்கிழமை, 10 நவம்பர் 2005, 16:24 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன் இதை அறிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் இரா.சம்பந்தன் கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி 3 மணிக்குத்தான் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டம் 3 மணித்தியாலத்துக்கும் மேலாக நடைபெற்றது. எதிர்வரும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டியது பற்றி மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் ஆராயப்பட்டது.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் மாறி மாறி வந்த சிங்கள அரசியல் தலைமைகள் எதுவிதமாக தமிழ் மக்களை நடத்தினார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எப்படிச் செயற்பட்டார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் இனப்படுகொலையை அரசுகள் எப்படியெல்லாம் நடத்தின என்பது பற்றியும் நீண்ட நேரமாக பேசப்பட்டன.
கடந்த மூன்றரை வருடகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அரசும் பொதுக் கூட்டமைப்பு அரசும் எப்படியாக செயல்பட்டன என்பது பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக தமிழ்ச்செல்வனும் தங்களது கருத்தைத் தெரிவித்தார்.
இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு,
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தமிழ் மக்கள் விரும்புகிற ஒரு தீர்வு ஏற்பட முடியாது. ஏற்படாது என்பதுதான்.
அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்ட, சமாதான காலம் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தலை அணுகுகின்ற போது இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்ட வேண்டியது இல்லை. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டுவதன் மூலமாக எதுவித நன்மையும் அடைய முடியாது என்பது எங்களது திடமான கருத்து.
தற்போது போட்டியிடும் இரு கட்சிகளனது வேட்பாளர்களும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மனதில் கொண்டு ஆராய்ந்து சிந்திக்கிற போது இந்தக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது எம்மால் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மக்களும் இந்த நிலைமைகளை அனுபவித்திருக்கிறார்கள். அவதானித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நிலைமைகள் எல்லாம் தெரியும். வடக்கு-கிழக்கில் வாழ்கிற மக்கள் அனைவரும் நிலைமைகளை புரிந்தவர்கள். எமது மக்களும் இதே சிந்தனையில்தான் இருக்கிறார்கள். எமது மக்களும் இதேவிதமான முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதில் எதுவிதமான ஐயப்பாடும் இல்லை.
எமது பழைய அனுபவங்களின் அடிப்படையில் விசேடமாக யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பிறகு- தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்த சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கிய பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்பது எமது முடிவு என்றார் இரா. சம்பந்தன்.
அப்படியானால் சிங்களத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை என்பது எமது தெளிவான கருத்து என்றார் சம்பந்தன்.
தமிழ் மக்கள் வாக்களிக்க விரும்பினால் நீங்கள் தடுப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், நிச்சயமாக தடுக்கமாட்டோம். தமிழ் மக்களினது ஜனநாயக உரிமையை பறிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் அனுபவங்களின் அடிப்படையில் நிச்சயம் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்டமார்கள் எமது நம்பிக்கை என்றார் அவர்.
ஊடகவியலாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கூறியதாவது:
சிங்களத் தேசத்துக்கான தேர்தல் தொடர்பாக தமிழர்கள் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
1972-77 ஆம் ஆண்டு காலகட்ட அரசியல் அமைப்புகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இதை எங்கள் அரசாக ஏற்கவில்லை நாம். இது எங்கள் தேசத்துக்கான தேர்தலும் அல்ல. சிங்கள தேசத்துக்கானத் தேர்தல் என்றார் அவர்.</b>
நன்றி: புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>