Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமணம் அவசியமா ?
#3
மனிதன் பலமான சமூகப்பிராணி...அந்த வகையில் நோக்கும் போது பலமான குடும்ப அமைப்பு இல்லையேல்.... அது தனி மனித வாழ்வியல்.. உட்பட மனித இனத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கும்...!

ஆதிகால மனிதன் திருமணம்.. போன்ற எந்தச் சமூகச் சடங்குகளின் அறிமுகம் இன்றி விலங்குகள் போல வாழ்ந்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்..! 500,000 ஆண்டுகள் உயிரியல் வரலாற்றுப் பின்னணி உள்ள மனிதன் எப்போ பலமான சமூக வாழ்வியலுக்குள் நுழைந்தானோ அதன்பின் தான் கூட்டு முயற்சி மூலம் சிந்தனைப் பெருக்கத்துக்கும் பரவலுக்கும் இடமளித்து பலமான நாகரிகங்களையும் வளர்ச்சிகளையும் தனதாக்கி இன்று குறிப்பிடத்தக்க அளவுக்கு இயற்கையை வென்று வாழப்பழகி இருக்கிறான்..! உலகில் வேறு எந்த உயிரினமும் இயற்கையை வென்று வாழவில்லை...அவை இயற்கைக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன..! அவற்றிலும் கூட பலமான சமூக வாழ்வியல் நடத்தையைக் காண்பிக்கும் உயர் விலங்குகளே...நீண்ட காலம் தப்பிப்பிழைத்து வாழ்வதில் அதிகம் வெற்றி கண்டுள்ளன. மனித அறிவு வளர்ச்சியில்- அவன் மூளை விருத்தியில்- பலமான சமூக வாழ்வு பல சந்தர்ப்பங்களில் அவனுக்கு உதவி இருக்கிறது..! குறிப்பாக தனி நபர் பாதுக்காப்பென்பது சமூகத்தினது பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்ற நிலை வரும் போது மனிதனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட அவனின் சிந்தனை வேறு வடிவங்களில் வளர்க்கப்பட உதவியாகிவிடுகிறது..! அதன்பால் உருவானதே மனித அறிவியல் வளர்ச்சி..! பல விலங்குகள் தம்மை பாதுக்காப்பது குறித்து செயற்படுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துவதால் அவற்றை இயற்கை எளிதாக கட்டுப்படுத்திவிடுகிறது..!

மீண்டும்.. பலவீனமான சமூக கட்டமைப்பு நிலை என்பது மனிதரில் பலவீனத்தையே உண்டாக்கும்..! அது பல்வேறு வடிவங்களில் உருவாகும்..! குறிப்பாக மனோவியல் பலவீனங்களுக்கு அது வித்திடும்..! அது முழு உடலையும் கட்டுப்படுத்தும்..பாதிக்கச் செய்யும்..! காரணம்..மனிதன் ஒரு சமூக விலங்கு..என்பது கட்டாய நிலை..! பலமான சமூகம் தன்னோடு இருக்கிறது என்பதே மனிதருக்குப் பல சந்தர்ப்பங்களில் பலம் சேர்த்திருக்கிறது..! அதற்கு திருமணம் குடும்பம் என்ற நிலைகளும் முக்கிய பங்காற்றி இருக்கின்றன...! பலமான உறுதிமிக்க வளர்ச்சி நோக்கிய சமூகக் கட்டமைப்புக்கு புரிந்துணர்வின்பாலான திருமணம் நிச்சயம் அவசியம்..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by inthirajith - 11-10-2005, 09:01 AM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 09:26 AM
[No subject] - by MUGATHTHAR - 11-10-2005, 01:23 PM
[No subject] - by SUNDHAL - 11-10-2005, 03:12 PM
[No subject] - by கரிகாலன் - 11-10-2005, 04:21 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 06:28 PM
[No subject] - by Rasikai - 11-10-2005, 08:09 PM
[No subject] - by Vishnu - 11-10-2005, 09:56 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 10:22 PM
[No subject] - by sooriyamuhi - 11-11-2005, 05:10 AM
[No subject] - by aathipan - 11-11-2005, 07:12 AM
[No subject] - by sOliyAn - 11-11-2005, 08:12 AM
[No subject] - by sinnappu - 11-11-2005, 08:20 AM
[No subject] - by tamilini - 11-11-2005, 10:13 AM
[No subject] - by tamilini - 11-11-2005, 10:14 AM
[No subject] - by sinnappu - 11-12-2005, 09:07 AM
[No subject] - by MUGATHTHAR - 11-12-2005, 09:59 AM
[No subject] - by kuruvikal - 11-12-2005, 10:34 AM
[No subject] - by Mind-Reader - 11-12-2005, 11:26 AM
[No subject] - by tamilini - 11-12-2005, 01:38 PM
[No subject] - by kuruvikal - 11-12-2005, 02:35 PM
[No subject] - by Mathuran - 11-12-2005, 11:10 PM
[No subject] - by sathiri - 11-12-2005, 11:43 PM
[No subject] - by கரிகாலன் - 11-13-2005, 05:19 AM
[No subject] - by கரிகாலன் - 11-13-2005, 05:21 AM
[No subject] - by கரிகாலன் - 11-13-2005, 05:26 AM
[No subject] - by adithadi - 11-13-2005, 06:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)