11-29-2003, 02:50 AM
kuruvikal Wrote:அஜீவன் அண்ணா அவர்களே...
எமக்கு சினிமாத்துறையில் அனுபவம் இல்லை ஆனால் சில விபரணங்களுக்கு காட்சியமைத்து மட்டும் தெரியும்...புகைப்படத்துறையில் அடிப்படை தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருந்தோம் அதை வைத்துப் பதில் தந்தோம்.....! மேலும் நாம் இப்போது தொழில்சார் முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருப்பதால் தொழிற்கூடம் ஒன்றில் இருக்கின்றோம்.....அங்கு வெளியாரை அழைப்பது நல்லதல்ல....அந்த வகையில் உங்களின் இந்தக் கோரிக்கையையும் நிராகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு....எது எப்படியோ வருங்காலத்தில் ரசிகனாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியே....!
மீண்டும் நட்புடன் அன்பின் குருவிகள்..!
அன்புடன் குருவிக்கு,
வேதனையானாலும்,பதிலுக்கு நன்றி.
சினிமா துறை பற்றிய அனுபவம் பற்றி அல்ல, உங்கள் கருத்துகள் காரணமாக உங்களோடு நேரில் பேசுவதும் , கலந்துரையாடுவதுமே எனது குறிக்கோளாக இருக்கிறது.
உங்களைப் போன்றவர்களை சந்திப்பதில் எனக்குள் ஒரு அலாதியான பிரியம் உண்டு. இது போலவே திறமையான கருத்தாளர்களை சந்திப்பதும் , பேசுவதும் , ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வதும் மிகவும் பயனுள்ளதாகவே இருந்திருக்கிறது.
எனவே முடிந்தால் உங்கள் தொடர்பு தொலைபேசி இலக்கத்தை தாருங்கள். அப்படியாவது கலந்துரையாடும் போது பின்னர் எமக்குள் ஒரு தொடர்பை தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியம் என்பது எனது நம்பிக்கை.
அன்புடன்
அஜீவன்

