11-09-2005, 06:45 PM
Quote:\"வா மகனே வா
வந்து முகர்ந்து பார்
உன் தந்தையின்
சட்டையில் அடிப்பது
இரத்த வாசனை அல்ல
தேச வாசனை
உள்ளம் கல் செய்
அழுதழிக்காதே இரத்தக் கறையை
தமிழ்ப் பெண்களின் நெற்றிகளிற்கு
உன் தந்தை தந்த
குங்குமப் பொட்டு அது
தொடு - உணர்வால்
அவர்விட்ட கடைசி மூச்சின் ஆறாத சூட்டை
சட்டையின் நெஞ்சில் காதுவை
கேட்கும் கடைசித் துடிப்பின்
தேய்ந்த எதிரொளி
காற்சட்டைக் கிழிசலில்
காற்றாடும் நூல்கள்
இமயம் கட்டியிழுத்த இழைகள்
இது தமிழ்த்தாய்
எனக்குத்தந்த சீருடை
இந்த உடைக்குள் இருந்த தேகம்
இன்று பூமிக்குள்
உள்ளிருந்த உணர்வு மட்டும்
உன்னில்..
என்னில்..
ஊரில்..
தேசமே அழட்டும் - உன் தந்தைக்காய்
உன்னையும் என்னையும் தவிர
என்தலையணை தெலைந்த இடத்தில்
உன் தந்தையின் உடை
ஒவ்வொரு நாளும்
தமிழீழத்தை
தலைக்குவைத்துத் தூங்கப் பார்க்கிறேன்
தூங்கமாட்டேன் மகனே
தூங்கமாட்டேன்
தந்தையின் கடைசி உடையுடன்
காத்திருப்பேன்
உன் உயரம்
அகலம்
உள்ளம்
இந்த உடையோடு பொருந்தும் வரை.\"
ம் நல்ல ஒரு கவிதையைத் தந்திருக்கிறீர்கள் அக்கா.
தேச விடிவிற்காய் தன் தந்தையை இழந்த தனயனிற்கு ஆறுதல் சொல்லும் உறவொன்று....
மாவீரர்களிற்கும் போராளிகளுக்கும் எம்மைப்போன்று உறவுகள் சிலவல்ல....
கார்த்திகை 27 அவர்கள் தம் உறவுகளைக் கண்ணெதிரே காணும் நாள். எம் தேசத்தின் எழுச்சிநாள்...
நன்றி அக்கா!
அழகான இசையுடன் உங்கள் இனிமையான குரலில் இக்கவிதையைத் தந்ததற்கு.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

