11-09-2005, 05:37 PM
Eelavan Wrote:அன்பின் சோழியன் அண்ணா,தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.உறுத்தும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்
கவிஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பட்டம் சூட்டி மகிழ்வது.திராவிட முன்னேற்றக் கழகங்களின் எச்சம்.அது ஈழத்தவர்களையும் பிடித்தாட்டுகிறது என்பது எனது அபிப்பிராயம்.
வேடிக்கையான,மற்றவர்களால் கேலியாகப் பேசப்படும் இந்தப் பட்டங்களை எதற்காக நண்பர் சஞ்சீவுக்கும் சூட்டியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.இது அவரது தவறோ உங்களது தவறோ இல்லை ஆனால் நீங்கள் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியமையால் சுட்டிக் காட்டுகிறேன்.
சஞ்சீவின் சிந்தனைகளுக்கும் செயலுக்கும் ஏற்றதாக இளஞன் என்னும் புனைபெயரை அவரே தேர்ந்தெடுத்திருக்க எதர்காக கவிக்கூர் என்னும் பட்டம்?யாரோ ஒரு பெரியவர் பாராட்டாய்ச் சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் அதனைக் காவித்திரிய வேண்டுமா?'செந்தமிழ்க் கோடையிடி' பட்டம் கேட்கவே சிரிப்பு வருகிறது.
இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்
முதலின் அனைவருக்கும் நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அடுத்து ஈழநாதனின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
சோழியான் அண்ணாவும், அஜீவன் அண்ணாவும் "கவிக்கூர்" பற்றி தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் நன்றி.
TTN (தமிழ்த் தொலைக்காட்சி இணையம்) இல் மூன்று மாதகாலம் பயிற்சிக்காய் சென்றிருந்தபோது, ஆரம்பகால என் கவிதை முயற்சிக்கு உற்சாகம் தந்தவரான நாடகக் கலைஞர் தாசீசியஸ் ஐயா (அப்போது ரிரிஎன் தமிழ் ஒளியின் நிர்வாகப்பொறுப்பில் இருந்தார்.) அவர்களிடம் எனது கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளைக் கொடுத்து வாழ்த்துரை எழுதித் தருமாறு கேட்டிருந்தேன். அவரும் அனைத்தையும் வாசித்துவிட்டு சில நாட்களின் பின் "காலத்தின் கவிக்கூர் இவன்" என்று ஒரு வரியை மட்டும் எழுதித் தந்தார். அதுதான் கவிதைத் தொகுப்பின் தொடக்கமாக இடப்பட்டுள்ளது. அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நான் அதைப் பார்க்கிறேன். <b>பட்டமல்ல - வாழ்த்துரை மட்டுமே!!!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஈழநாதன்,
நீங்கள் குறிப்பிட்டதுபோல பட்டங்கள் என்பன இன்று சும்மா சும்மா அள்ளி வழங்கப்படுகின்றன. யாருக்கு எதற்காக வழங்குகிறோம் என்கிற அடிப்படையில்லாமலே வழங்கப்படுகின்றன.
மேடையும், ஒலிவாங்கியும் கிடைத்துவிட்டால் போதும் பட்டங்கள் குவிந்துவிடும். அதனால் அதற்குரிய மதிப்பும் இன்று இல்லாமல் போய்விட்டது. (துரோகி என்ற சொல்லுக்குரிய தன்மை இன்று எப்படி காணாமல் போயிற்றோ, அதேபோல்!)
பிறர் தரும் வாழ்த்தோ, பாராட்டோ, கருத்தோ அது அவரவர் எனது கவிதைகளை உள்வாங்கியதன் வெளிப்பாடு - அவர்களின் சுதந்திரம் - அதனை நான் தடுக்க முடியாது. அதேநேரத்தில் அவர்கள் சொல்லியதை அப்படியே காலம்பூராவும் சுமந்துகொண்டும் செல்ல முடியாது. (பெயருக்கு முன்னால எத்தனையைத்தான் போடுவது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
நான் எப்படி என்னை சமூகத்தில் அடையாளம் காட்ட விரும்புகிறேனோ அதுதான் முக்கியம்.
Quote:இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்
பட்டங்கள் சுமப்பதில் இளைஞனுக்கும் உடன்பாடில்லை. வெளியார் உருவாக்கும் ஒரு போலியான புகழ் வட்டத்துக்குள் முடக்குப்பட்டு கிடக்க இளைஞன் விரும்புவதில்லை. எனவே, ஈழநாதனின் விருப்பம் தான் இளைஞனதும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மீண்டும் அனைவரது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

