11-08-2005, 03:53 PM
<b>'மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரும் வளியும்
வளித் தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல'
என வரும் புறநானுற்றுப் (2) பாடலால், நிலம், வான், காற்று, நீர், நெருப்பு ஆகிய ஐந்தாலும்
உண்டானது உலகம் என்ற அறிவியல் உண்மையை அறியாலாம். மேலும்
[b]'அண்டப் பகுதியின் உருண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்
சிறியவாக..............'</b>
என வரும் மாணிக்கவாசகரின் பாடலால் உலகம் உண்டான முறையைக் காணலாம்.
நிலத்தை நன்கு உழுது அதை சூரிய ஒளியில் நன்கு காயவிட்டு பின் பயிர் செய்யப்பட்டால், பயிருக்கு உரம் தேவைப்படாது.
சூரிய ஒளியில் இருந்து மண், பயிர் விளைவதற்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது என்ற
அறிவியல் உண்மையை திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார்.
[b]தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும் (குறள் 1037 )

----- -----