11-27-2003, 03:52 PM
kuruvikal Wrote:அன்பின் அஜீவன் அண்ணா அவர்களுக்கு...<img src='http://www.yarl.com/forum/images/avatars/357404183f61ca054e212.jpg' border='0' alt='user posted image'>
முதலில் உங்களின் பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள்...!
நீங்கள் ஒரு கலைஞனாக ஒரு ரசிகனைப் பார்க்க விரும்புவது மகிழ்ச்சியே....ஆனாலும் நாம் தற்போது லண்டனில் இல்லை....நாம் சற்றுத் தொலைவில் இருக்கின்றோம்....அதுமட்டுமன்றி நாம் உடனடியாக லண்டன் திரும்பக் கூடிய நிலையிலும் இல்லை...இதனால் உங்களை வரும் மார்கழித் திங்களில் சந்திக்கும் அரிய வாய்ப்பை நாம் இழந்து நிற்கிறோம்...அதற்காக எமது வருத்தங்களும் கூட...எனினும் ஒரு கலைஞனாக ஒரு ரசிகனாக தங்களை என்றோ ஒரு நாள் சந்திப்போம்....!
உங்கள் கோரிக்கை நிறைவுபெறாது போனாலும் உங்கள் புதிய படம் முழு வெற்றி பெற வாழ்த்துக்கள்....!
என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்.
அன்புடன் குருவிகளுக்கு,
உங்களை சந்திக்க முடியாததையிட்டு வருத்தம்தான். இருப்பினும் என்றோ ஒருநாள், என்னை ஒரு ரசிகனாகவேதான் பார்ப்பீர்கள்.
காரணம் முதலிலும் முடிவிலும் நான் ஒரு ரசிகனே.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
அடுத்த படத்தில் நீங்கள் குறை சொன்னால் அது உங்களால்தான்............... ஏன் தெரியுமா? எனக்கு உதவி செய்வதை விட்டு தொலைவுக்கு போய் விட்டீர்களே, அதுதான் காரணமாக இருக்கும்.
<span style='font-size:25pt;line-height:100%'>மு.கு:
குருவிகளே, நீங்கள் லண்டன் புறநகர் பகுதியில் வாழ்ந்தாலும் , என்னால் உங்களை சந்திக்க முடியும்.காரணம் தனியாக,நான் லண்டனுக்கு சுவிசிலிருந்து காரில்தான் வருகிறேன். அதுவும் காரில் நெவிகேசன் வேறு உள்ளது. உங்கள் முகவரியையும், தெலைபேசி எண்ணையும் தந்தால் என்னால் உங்கள் இருப்பிடத்துக்கு (ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும்)வர முடியும்.அதற்கான விபரங்களை தருவீர்களென நம்புகிறேன்.</span>
அன்புடன்,
அஜீவன்

