11-08-2005, 11:49 AM
அமைதிப் பேச்சுக்கள் என்ற பெயரில் ரணில் செய்த சதிகளின் பட்டியல்: மிலிந்த மொறகொட ஒப்புதல் வாக்குமூலம்!!
[செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2005, 15:28 ஈழம்] [ம.சேரமான்]
அமைதிப் பேச்சுக்கள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு உருவாக்கியதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்ததும், அமைதிப் பேச்சுக்களினூடே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழித்ததும் நாம்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவும், கடந்த கால அமைதிப் பேச்சுக்களில் சிறிலங்கா அரச பிரதிநிதியாகவும் பங்கேற்ற மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணலில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணல் விவரம்:
சிங்களத் தீவிரவாதிகள் சொல்வது போல் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் நாட்டினது பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படவில்லை. மாறாக எமது ஆட்சிக்காலத்தில் வலுவாக இருந்தது. அமைதிப் பேச்சுக்களை நாம் நடத்திக் கொண்டிருந்த போதும் விடுதலைப் புலிகளின் இரு வர்த்தகக் கப்பல்களை கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அழித்தோம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் நாம் முழுவீச்சில் செயற்பட்டோம். விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை நமது கடற்படை இடைமறித்தது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினது செயற்பாடுகளில் குறுக்கீடுகள் இருந்ததாக கேள்விப்பட்டோம்.
இராணுவத்தினது எண்ணிக்கையை நாம் குறைக்கப் போவதில்லை. உண்மையில் நமது இராணுவத்துக்கு கூடுதலான படையினர் தேவை. நாம் அரசு அமைத்தால் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே நமது இராணுவ வலிமை அதிகரிக்கப்படும். ஆனால் இந்த விடயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்க, இந்தியப் படைகளை நாம் களம் இறக்க உள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச பாதுகாப்பு வலையத்துடன் சிக்க வைத்துள்ளோம். அதன் மூலமாக அவர்கள் மீண்டும் ஒரு யுத்தத்துக்குத் திரும்புவது தடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அமைதி ஒப்பந்தம் நீடிப்பது என்பதும் சர்வதேச பாதுகாப்பு வலையத்தில் இப்போது நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அப்படி இல்லாது இருந்தால் நாம் மீண்டும் யுத்தத்துக்குத் திரும்பியிருப்போம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை ஒவ்வொருவரும் குறை சொல்கிறார்கள். ஆனால் அது தொடர்பில் எதுவும் செய்ய எவரும் முன்வரவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தால் யுத்தம்தான்.
அமைதி முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களுக்கமைய நாம் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வோம். அதில் எதுவித சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யுத்த காலத்தில் பிளவை ஏற்படுத்தியிருக்க முடியாது. அதற்கான சரியான சூழலை உருவாக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே கருணாவை ஆதரித்து வலை விரித்திருந்தோம். துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்து, வீதிகளைத் திறப்பது, வீதித் தடைகளை நீக்குவது போன்ற செயற்பாடுகள் மூலம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் கொடூரத்துக்கு மாற்றுச் சூழலை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம்.
தற்கொடைதாரியாக செயற்படக் கூடியவர் கூடிய இந்த சூழ்நிலைகளை அவதானிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை தனது மரணம் குறித்து யோசிக்க நேரிடும். மற்ற பிரஜைகள் போல் நாமும் உரிய வாய்ப்புகளை வாழ வேண்டும் என்றுதான் கண்டிப்பாக சிந்திக்கத் தூண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தாக்குதல் நடத்தும் ஆயுதக் குழுக்கள், கருணா குழுவுக்கு சிறிலங்கா புலனாய்வுத் துறையினரது ஆதரவு இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுவது உண்மைதான். ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஆயுதக் குழுக்களை களையவில்லை என்பதை மறுக்கிறோம். கிழக்கு மாகாணத்தில் அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவே அதை பார்த்தோம்.
"கருணா" என்பது அமைதி முயற்சிகளினால் உருவாக்கப்பட்டது. எமது வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கருணா குழுவுடன் நாம் செய்ய வேண்டிய சிலவற்றை கண்டிப்பாக செய்வோம் என்றார் மிலிந்த மொறகொட.
http://www.eelampage.com/?cn=21518