11-08-2005, 12:33 AM
ஜேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றமும் அப்பால் தமிழ் இணையத்தின் சலனம் அமைப்பும் இணைந்து வழங்கிய 'குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்' நிகழ்வு 30.10.2005 ஞாயிற்றுக் கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன், திருமதி பாமினி யூட்டா அருள்மதி வசந்தராசன் ஆகியோரது மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாகியது.
முதலாவது நிகழ்வாக, 'கவிக்கூர்' சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதை நூலின் அறிமுகம் நிகழ்ந்தது. பிறேமன் தமிழ்க்கலை மன்ற, விளையாட்டுக் கழக தலைவர் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm1.jpg' border='0' alt='user posted image'>
அதனைத் தொடர்ந்து பிறேமன் தமிழ்க்கலை மன்ற செயலாளர் இராஜன் முருகவேல் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm2.jpg' border='0' alt='user posted image'>
தொடர்ந்து 'செந்தமிழ்க்கோடையிடி' குமரன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வுரை செய்தார்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm3.jpg' border='0' alt='user posted image'>
உராய்வின் முதற்பிரதியை நாச்சிமார்கோயிலடி இராஜன் வழங்க, மூத்த திரைப்படத்துறைக் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்த சஞ்சீவ்காந்த் அவர்களின் நன்றியுரையுடன் நூல் அறிமுகம் நிறைவடைந்தது.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm4.jpg' border='0' alt='user posted image'>
நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து, சுமதி ரூபனின் 'மனமுள்', வதனனின் 'விலாசம்', 'கலைக்கண்' பால்ராஜின் 'கனவுகள்', கலைஞர் பராவின் 'பேரன் பேத்தி' ஆகியன திரையிடப்பட்டன.
தொடர்ந்து, அக்குறும்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm5.jpg' border='0' alt='user posted image'>
கருத்துப் பரிமாற்றங்களை சலனம் அமைப்பைச் சேர்ந்த முகுந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
படங்கள்: பிரபா
('தமிழமுதம்' இணையத்திலிருந்து..!)

.