11-07-2005, 09:56 PM
kuruvikal Wrote:முகத்தார் உங்கள் ஆக்கம் திறமையாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்..! உங்கள் ஆக்கத்தில் எங்களுக்கு பட்ட ஆதங்கம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. தயவுகூர்ந்து.. குறையாக எடுக்காமல் ஒரு விமர்சனமாகப் பாருங்கோ..!
10ம் வகுப்புப் படித்தவரையும்...அவர் சைக்கிள் திருத்து தொழிலைச் செய்ய முனைவதையும்...அதில் தவறு விடுவதையும்..சொல்லி இருக்கிறீர்கள்..! அதை வைத்து ஆக்கம் சில கட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கு..! எங்கள் பார்வையில் அது சிலரில் எதிர்மறை மனோவியல் விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது..! குறிப்பாக... 10ம் வகுப்பில் பெயில் விட்டாலும் புலத்தில் நீங்கள் மேலும் படிக்க வாய்ப்புக்கள் இருக்கு...! பெயில் விட்ட பாடத்துக்கு எத்தனை தடவையும் தோற்றி பரீட்சை எழுதலாம்..! அப்படி எழுதி பெரிய பட்டதாரிகளானவர்களும் உண்டு..! ஆனால் இலங்கையில் அப்படியல்ல..! ஒரு பாடத்துக்கு தோற்ற முடியாது தோற்றினால் எல்லாப் பாடத்துக்கும் தோற்ற வேண்டும்..! அதுவும் இரண்டு தடவை மட்டும் தான்...! எனவே 10 வகுப்பு பெயில் என்பது இலங்கை கல்வி நடைமுறைகளின் படி பழிப்புக்குரிய ஒன்றல்ல என்றே கருதுகின்றோம்..! அதை வைத்து ஒரு நபரின் கல்வியல் திறமையை முழுமையாக அளவிடுவது சரியல்ல...அது அவர்களை மனோவியல் ரீதியில் தாழ்த்தவே வகை செய்யும்..!
இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்... ஏல் படித்து 4 ஏ அல்லது 3 ஏ எடுத்தவர்கள் பல்கலைக்கழகங்களில் சிரமங்களை எதிர்நோக்கியும் இருக்கின்றனர்..! எனவே கல்விவை வைத்து தனிநபர்களை முழுமையாக எடை போடும் எமது சமூக வழக்கை அப்படியே பிரதி பண்ணாமல் நம்பிக்கை ஊட்டத் தக்க வகையில் இப்படியான சந்தர்ப்பங்களை கையாண்டால் சிறப்பா இருக்கும்..!
இப்போ இலங்கையில் டாக்டர் இஞ்சினியர் பட்டதாரிகள் என்று ஆகி கோடி கோடியாக வாங்கி புலத்துப் பெண்களுக்கு கணவனாக பலர் காத்திட்டு இருக்கிறார்கள்..! அவர்களை முகத்தில் அடியுங்கள்..வரவேற்கலாம்..! முழுக்க முழுக்க இலவசக் கல்வியையும் பெற்றுவிட்டு... கோடி கேட்குது அவைக்கு...! அவர்களை அடியுங்கோ...அவர்கள் தான் உண்மையில் சமூகத்தையும் கல்வித்திட்டத்தையும் நாட்டையும் ஏமாற்றுபவர்கள்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
![]()
படிப்பிச்ச செலவுகளுக்கு என்று 20 ஆயிரம் கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


