11-07-2005, 03:13 PM
Eelavan Wrote:அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா<img src='http://img494.imageshack.us/img494/3207/uraivuajeevanimg7mg.jpg' border='0' alt='user posted image'>
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.
ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,சு.வில்வரட்ணம்,பா.அகிலன்,றஷ்மி என்று தலமுறைகள் தொடர்கின்றன யாருக்கும் யாரும் பட்டம் சூட்டவில்லையே புலத்தில் இவை நடைபெறுவது அவ்வப்போது அங்கே அழைத்துக் கொண்டாடப்படும் திராவிடக் கட்சிகளினதும் தமிழ் சினிமாவினதும் தாக்கத்தால்தான் என நினைக்கிறேன்.அல்லது பழைய பண்டித மரபைப் புதுப்பிக்கிறார்களோ தெரியாது.கம்பவாரிதி,செந்தமிழ்ச் செல்வர் என்று.
புலத்தில் வெளிவரும் பத்திரிகைகளையும் இதழ்களையும் எப்படியாவது பெற்று அவற்றை இங்கிருக்கும் தமிழார்வம் மிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதும் பகிர்ந்து கொள்வதும் எனது வழக்கம்.அப்போது அவர்கள் என்னைக் கேட்ட கேள்வியைத்தான் உங்களை நான் கேட்டேன்
மற்றும்படி ஒழுங்கான விமர்சனங்களும் பாராட்டுக்களும் கலைஞனை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதில் மாறு கருத்து இல்லை
[size=15]ஈழவனின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
ஆனால் நண்பர் மதராசி "இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்" என்ற போதுதான் உதைத்தது.
நம் மத்தியில் உண்மையான கலைஞர்கள் நசிந்து போய் விட்டதற்கு காரணம்
மற்றவர் போல வளர முடியாமல் போவதற்காக வெளியேயிருந்து வரும் அழுத்தங்கள்தான்.
அது எந்த உருவத்திலும் வரலாம்.
<b>1.வரும் புகழை அல்லது வளர்ச்சியை ஆரம்பத்திலே தடுப்பது.
2.புகழ் வரும் படி செய்து மற்றவர் கண்களில் எரிவை உருவாக்கி மற்றவர் மூலம் வளர்ச்சியை தடுப்பது.
3.மனோ ரீதியான தாக்கங்களை உருவாக்கி வீழ்த்துவது.
இப்படியானவை முக்கியமானவை.</b>
ஒரு கலைஞன் தனக்கு எது வந்தாலும் நிலை தளராது இருக்க வேண்டும்.
அது புகழாக இருக்கட்டும் அல்லது இகழ்வாக இருக்கட்டும்.
தனது குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
சக கலைஞர்கள் துடித்த கணங்களை பார்த்திருக்கிறேன்.
என் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை சந்தித்திருக்கிறேன்.
இவையூடாக ஒரு கலைஞனாக எழும் உணர்வின்
தாக்கத்தை சக கலைஞனுக்காக அவன் என் எதிரியாக இருப்பினும் பேசுவேன்.
அப்படியில்லாதவன் சுயநலவாதி.
நாம் காசுக்காக - புகழுக்காக கலையை வியாபாரப் பொருளாக்குபவர்கள் ஆகக் கூடாது.
நமக்கான உணவுர்வுகளை - மற்றவர்களது தாக்கங்களை - பிரச்சனைகளை சொல்லும் நாம்
நமது திறமைகளை வெளிப்படுத்தி நமது இனத்துக்கான
ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வதற்கான படைப்புகளை
உருவாக்கும் கலைஞர்களாக இருக்க வேண்டும்.
<b>ஆயிரம் குப்பைகளை கொட்டுவதை விட ஒரு வைரம் காலம் முழுவதும் பேச வைக்கும்.
அதற்காக ஒரு வருடமென்ன பல வருடங்கள் தவமிருங்கள்.
அடி மனதில்
படைப்பு எனும் விதைக்கு நீர் பாச்சுங்கள் - அது
ஒருநாள் தளிர்விடும்...............
பூத்துக் குலுங்கி மக்களை வசீகரிக்கும்
அன்று
உலகம் ஒரு நாள் உங்களை நோக்கும்.</b>
எனக்கு
மதராசி மேலோ வேறு எவர் மேலோ எந்தக் கோபமுமில்லை. பார்த்த பார்வையினூடக சொன்ன விதம் தவறாக இருந்தது. எனவே நானும் எழுத வேண்டி வந்தது. இங்கே கருத்து சார் பிரச்சனையே தவிர தனிப்பட்ட முரண்பாடு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஈழவன் சொல்வது போல ஒரு ஆரம்ப கலைஞனின் படைப்பு மேல்
பெரும் எதிர்பார்ப்புகளோடு மற்றவர்களை நோக்க வைக்கும் போது அப் படைப்பு தோல்வியடையும் சாத்தியம் உண்டு.
இது குறித்த அவதானத்தை
சம்பந்தப்பட்டோர் முடிவு செய்ய வேண்டிய விடயமாகவே கருதுகிறேன்.
இதை இத்தோடு விட்டு படைப்பு சம்பந்தமாக ஆராய்ந்தால் அல்லது கருத்துகளை பகிர்ந்து கொண்டால் ஆக்க பூர்வமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நன்றி.

