11-07-2005, 01:23 PM
மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் தற்போது டப்பிங் வேலைகளும் மிக மும்மரமாக நடை பெறுகின்றது. மட்டு நகரை சேர்ந்த ஒரு இளம் பெண் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜேர்மன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். புதியவின் மண் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு எதிர்பாருங்கள்.

