11-07-2005, 11:38 AM
அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.
இளஞன் நன்கு அறிந்தவர் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் மற்றும்படி ஜேர்மனி,சுவிட்சலாந்து பிரான்சில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் வழங்கப்படும் இவ்வாறான பட்டங்கள் உண்மையில் ஆரோக்கியமானவை அல்ல.
ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,சு.வில்வரட்ணம்,பா.அகிலன்,றஷ்மி என்று தலமுறைகள் தொடர்கின்றன யாருக்கும் யாரும் பட்டம் சூட்டவில்லையே புலத்தில் இவை நடைபெறுவது அவ்வப்போது அங்கே அழைத்துக் கொண்டாடப்படும் திராவிடக் கட்சிகளினதும் தமிழ் சினிமாவினதும் தாக்கத்தால்தான் என நினைக்கிறேன்.அல்லது பழைய பண்டித மரபைப் புதுப்பிக்கிறார்களோ தெரியாது.கம்பவாரிதி,செந்தமிழ்ச் செல்வர் என்று.
புலத்தில் வெளிவரும் பத்திரிகைகளையும் இதழ்களையும் எப்படியாவது பெற்று அவற்றை இங்கிருக்கும் தமிழார்வம் மிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதும் பகிர்ந்து கொள்வதும் எனது வழக்கம்.அப்போது அவர்கள் என்னைக் கேட்ட கேள்வியைத்தான் உங்களை நான் கேட்டேன்
மற்றும்படி ஒழுங்கான விமர்சனங்களும் பாராட்டுக்களும் கலைஞனை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதில் மாறு கருத்து இல்லை

\" \"