11-07-2005, 07:49 AM
[size=18]<b>முகத்தார் வீடு - அங்கம் 7 </b>
பொண்ணம்மா : இஞ்சை பாரப்பா குறுக்காலை போவார் படலையைத் திறந்து விட்டுட்டுப் போட்டினம் உந்த டண்ணின்ரை நாய் வந்து செய்யிற வேலையை. .
முகத்தார் : பொறு. . .பொறு . கலைச்சுப் போடாதை குடுக்கிறன் பார் இண்டைக்கு
பொண்ணம்மா: என்ன இப்ப செய்யப் போறீயள்?
முகத்தார் : கல்லைக் கண்டா நாயைக் காணேம் நாயைக் கண்டா கல்லைக் காணேம் இண்டைக்கு ரண்டும் கிடைச்சிருக்கு அடிக்காம விடமாட்டன்
பொண்ணம்மா: உன்னானை கல்லை கீழை போடுங்கோ போண மாசம் நடந்ததை மறந்து போட்டியளே. . .
முகத்தார் : என்ன போண மாசம்?
பொண்ணம்மா: அதுதான் குலத்தாற்ரை கோழியைக் கலைக்கவெண்டு கல்லெடுத்து எறிஞ்சு அது அவையின்ரை கேற்றிலை பட்டு பெரிய பிரச்சனை வர பாத்துச்சே. . .
முகத்தார் : அதடியப்பா கோழி நான் எறிய அது பறந்திட்டுது இது நாய் எப்பிடி பறக்கும்
பொண்ணம்மா: உங்கடை மூளையைக் கொண்டை கட்டேலை வைக்க சமையல் வேலை முடிஞ்சிட்டா வெளியிலை எங்கையன் போட்டு வாங்கோவன்
முகத்தார் : என்னை என்னதுக்கு இப்ப கலைக்கப் பாக்கிறீர்?
பொண்ணம்மா: இந்தா டிவிலை நாடகம் வேறை தொடங்கப் போகுது கத்தாம போங்கோ பாப்பம்
(அந்த நேரம் சாத்திரியார் இன்னுமொருவரைக் கூட்டிக் கொண்டு வாறார்)
பொண்ணம்மா: உங்களை அனுப்புவம் எண்டு பாத்தா உங்களைத் தேடி ஆளே வருகினம் இனி டிவி பாத்த மாதிரித்தான்
முகத்தார் : சாத்திரி வா. . வா. . அங்காலிப்பக்கம் வர இருந்தன் அதக்குள்ளை நீயே வந்திட்டாய் என்ன விசயம்?
சாத்திரி : நானும் உன்னை பாக்கத்தான் வந்தனான் இவர் கொக்குவில் ஆள் மகன்ரை குறிப்பைப் பாக்க என்னட்டை வந்தவர் குறிப்பிலை வெளிநாட்டுப் பலன் காட்டுது அதுதான் உன்னட்டை கூட்டியிட்டு வந்தனான்
முகத்தார் : எனக்கு தெரிஞ்ச ஏஜென்சி ஒண்டும் இல்லேயேடா அனுப்பிறதுக்கு. . .
சாத்திரி : ஜயோ. .அப்பிடியில்லை முகத்தான் பெடிக்கு கலியாணப்பலன் வேறை இருக்கு அதுதான் உன்னட்டை விட்டா எதாவது கோத்துவிடுவாய் எண்டுதான். . .
முகத்தார் : அட. . .அட.. . அப்பிடி வாறியே. . .சரி. . .சரி. . .இருங்கோ உங்கடை பேர் என்ன?
சாத்திரி : இவற்ரை பேர் பழணியாண்டி பெடியின்ரை பேர் மாதவன்
முகத்தார் : என்ன பெயர் ரொம்ப பழசா கிடக்கு
பழணியாண்டி : மகனும் கூட்டாளிமார் இப்பிடி சொல்லுனம் எண்டு போட்டு தன்ரை பேரை மாதேஷ் எண்டு மாத்த வெளிக்கிட்டவன்
முகத்தார் : ஜயா நான் சொன்னது உங்கடை பெயரை. . .சரி அதை விடுங்கோ நீங்க என்ன மாதிரி பெண்ணு பாக்கிறீங்கள்?
பழணியாண்டி : எனக்கு சின்னனிலையிருந்து லண்டன் கனடா போக வேணுமெண்டு ஆசை
முகத்தார் : சாத்திரி இப்ப பெண்ணு இவருக்கோ இல்லை பெடியனுக்கோ?
பழணியாண்டி : என்னைச் சொல்ல விடுங்கோவன் பெடியனை இப்பிடியான இடத்திலை கட்டிக் குடுத்தா பிறகு நாங்களும் போகலாமெல்லோ
முகத்தார் : ஜயா நீங்க போறது உங்கடை கையிலையோ இல்லை பெடியன்ரை கையிலையோ இல்லை வரப்போற பெடிச்சின்ரை கையிலைதான் இருக்கு ஆனபடியாலை இப்பவே பறக்காம விசயத்துக்கு வாங்கோ ஏன் வெளிநாட்டிலை கட்டிக் குடுக்க நிக்கிறீயள்?
பழணியாண்டி : வெளிநாட்டிலை கட்டிக்குடுத்தா தான் ஊருக்கை கொஞ்சம் டிமான்ட் காட்டித் திரியலாம்
முகத்தார் : ரொம்ப நல்ல விசயம் இப்ப மகன் என்ன செய்யிறார்?
பழணியாண்டி :சும்மாதான் இருக்கிறார் அவற்ரை படிப்புக்கேத்த வேலை கிடைக்குதில்லை
முகத்தார் : அப்பிடியா. . . .என்ன படிச்சிருக்கிறார்?
பழணியாண்டி : 10ம் வகுப்பு தமிழ் பெயில் எண்டபடியாலை மேலை படிக்கேலாமல் போட்டுது
முகத்தார் : இந்த படிப்புகேத்த வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் அப்ப நீங்க வேறை துறையிலை ஆளைச் சேர்த்துவிட்டிருக்கலாமே
பழணியாண்டி : இப்ப கொஞ்ச நாளாத்தான் டிவிலை ஒரு படத்தைப் பாத்திட்டு மெக்கானிக் வேலை செய்யப் போற எண்டுட்டு வீட்டிலை கிடந்த சைக்கிலை எல்லாத்தையும் கழட்டிப் புூட்டினான்
முகத்தார் : பாத்தியளோ அவனுக்குள்ளை ஒரு திறமை ஒளிச்சிருந்திருக்கு
பழணியாண்டி : ஆனா புூட்டி முடிஞ்சாப்பிறகு பாத்தா நிறையச் சாமான் மிஞ்சிக்கிடந்திச்சு
முகத்தார் : அதுவும் நல்லதுதானே அப்பிடியே பக்கத்திலை பாட்ஸ் கடை யொண்டையும் போட்டுட்டாப் போச்சு. . . .
பழணியாண்டி : எல்லாத்துக்கும் காசு வேணுமே. . . .
முகத்தார் : இப்ப பேருக்கு ஏத்தமாதிரி தட்டுமட்டும் தான் வைச்சிருக்கிறீயள் சரி பெடியன்ரை குணநடைகள் எப்பிடி?
பழணியாண்டி :அதை கேக்கத் தேவையில்லை காலேலை கோயிலுக்கு போட்டுத்தான் மறு வேலை பாப்பான்
சாத்திரி : இந்த காலத்திலை இப்பிடி ஒரு பையனா?
முகத்தார் : சாத்திரி கோயிலுக்கு போறவையெல்லாம் கும்பிடத்தான் போறவை எண்டு எப்பிடிச் சொல்லுறது
பழணியாண்டி : அப்ப என்ரை பெடியனை பெம்பிளையளை பாக்கப் போற தெண்டு சொல்லறீயளோ?
முகத்தார் : சா.. . .சா. . அப்பிடி நான் சொல்லேவை சிதறு தேங்காய் கோயிலிலைதானே உடைக்கிறது அதுதான் சரி விசயத்துக்க வருவம் பொண்ணுவீட்டு பகுதியாலை எப்பிடி எதிர் பாக்கிறீயள்?
பழணியாண்டி : பெரிசா என்னத்தைக் கேக்கிறது பெடியனை எடுத்தாக் காணும் அதோடை பெடியனை படிப்பிச்சதெண்டு ஒரு 20 லட்;சம் தந்தா நல்லம்;
முகத்தார் : என்ன 10ம் வகுப்பு மட்டும் படிப்பிக்க 20 சிலவழிச்சியளோ?
பழணியாண்டி : இப்பிடிச் சொல்லிதானே எங்கடை ஆட்கள் வாங்கிறது வழக்கம் அதுதான். . . . .
முகத்தார் : அதுக்காண்டி 10 வகுப்பு பெயிலுக்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியலை
பழணியாண்டி : 5ம் வகுப்பு படிச்சவைக்கே இப்பிடி குடுத்திருக்கினம் உங்களுக்கு வேணுமெண்டா ஆட்களை சொல்லட்டே என்ன சாத்திரியார் இவர் சும்மா எல்லாம் கேள்வி கேக்கிறார் விசயத்தை முடிக்க மாட்டார் போலகிடக்கு
சாத்திரி : முகத்தான் உதுகளை விட்டுட்டு இப்ப எதாவது கை வசம் இருக்கோ பார்
முகத்தார் : லண்டன் குறிப்பொண்டு கையிலை இருக்கு நல்ல பகுதி இஞ்சை பக்கத்தி ஊர்தான் பிள்ளை சமையலிலையும் வலு கெட்டிக்காரி மாங்காய் சட்னி ஒண்டு போடுவாள் சும்மா. . . . .சொல்லி வேலையில்லை
சாத்திரி : (ரகசியமாக) ஏண்டா முகத்தான் லண்டனிலை இருக்கிற பிள்ளை சட்னி போட்டதை சாப்பிட்ட மாதிரிச் சொல்லுறாய்
முகத்தார் : உன்ரை தொழிலுக்கை நான் தலை இடுறனானே பிறகெதுக்கு இதுக்கை மூக்கை நீட்டுறாய் நாங்க இப்பிடித்தான் அள்ளி விடுவம் இதையெல்லாம் கண்டுக்கபிடாது
பழணியாண்டி : மனுசிக்காரி சொல்லிறா குத்துவிளக்காட்டம் மருமகள் வரவேணும் எண்டு
முகத்தார் : ஏன் அப்பதான் திரி இழுத்து பத்த வைக்க லேசோ. . .
பழணியாண்டி : ஆனா மகன் சொல்லுறான் (ஓரு படத்தை நீட்டி ) இதிலை இருக்கிற பெண்ணு மாதிரிதான் வேணுமெண்டு
முகத்தார் : சாத்திரி இதென்னடா திரிஷான்ரை போட்டோவைக் காட்டுறார். . . . ஜயா இதிலை இருக்கிற மாதிரிதான் வேணுமா? கொஞ்சம் முன்னுக்கு பின்னை இருந்தா பரவாயில்லையா?
பழணியாண்டி: அப்பிடி உங்களிட்டை இல்லாட்டி சொல்லுங்கோ நான் வேறை புரோக்கரைப் பாக்கிறன்
முகத்தார் : சாத்திரி இது சரி வராத கேஸ் நான் சூடாகிறத்துக்கிடையிலை ஆளைக் கூட்டிக் கொண்டு போயிடு
சாத்திரி : என்ராப்பா டென்ஷன் ஆகிறாய்?
முகத்தார் : பின்னை என்னடாப்பா பெடிப்பிள்ளேண்ரை படிப்பு வள்ளலிலை லண்டன் 20 லட்சம் இதிலை திரிஷா மாதிரி என்ன விளையாடுறாங்களா. .
(சாத்திரியார் மெல்ல பழணியாண்டியை கூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார்)
முகத்தார் : (மனசுக்குள் இப்பிடி பொய்யளை சொல்லி கட்டிவைச்சுத்தான் இப்ப நாயாக் கிடக்கிறன் இனியாவது ஒழுங்கா இருப்பம் எண்டு பாத்தா சும்மா வந்து சூடாக்கிறாங்கள்)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>