06-14-2003, 06:49 PM
[size=18]கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் படைத்தார்- இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாடலினை இடையில் முடித்தார்
ஆடவந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
பெண் பெருமை பேசிப் பேசி காலங் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அடிப்பார்
முன்னூமில்லை பின்னூமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa