11-06-2005, 11:40 PM
Vaanampaadi Wrote:நாரதரே உமது மனச்சாட்சியை தொட்டு சொல்லும்.... இன்றைய காலகட்டத்தில் எங்காவது எப்படியாவது 2ரூபாக்கு
வேட்டி எடுக்கலாமா....
கள்ளச்சாராயம் கொடுத்து வாக்கு வாங்கிறது,கள்ள வாக்குப் போடுறது. அத நான் ஒத்துக்கிறேன்....
பேச்சுரிமை கருத்துரிமை எல்லாத்தையும் தடாவுக்குள்ள போடுறது, (உண்மைதாங்க,ஆனா இதில நீங்களும் சற்று தெளிவா விளங்கிக்கிங்க...... அதாவது தீவிரவாதத்த ஆதரிச்சி அல்லாது விடுதலைபுலிகளை ஆதரிச்சி யாராவது கருத்து தெரிவித்தால் அவ்ரு அந்த தடைசெய்யப்பட்ட சட்டத்தின் மூலம் கைதாகும்தன்ம உடயவராகிறார்)அப்டீன்னு சட்டம் கொண்டுவந்தாங்க.......
Quote:நாங்க இப்ப தமிழ் நாட்டு கருத்தாடல் களங்களுக்க வந்து இப்படி கேக்க ஏலாம இருகிறது ஜன நாயகமுங்க.
நாரதா, இது ஒரு சுத்தமான பொய்....நம்மட களத்தில இது ஏற்பட வாய்ப்பில்லை ... உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.... இன்று இந்த நிமிடம் யாஹூ பக்கத்திற்கு சென்று பாருங்கள் அங்கே சுத்த தமிழில் பேசிக்கொண்டிருப்பவர் ஒரு இலங்க தமிழருங்க ......
அப்புறம் மருத்துவமனைகுள்ள புகுந்து வைத்தியர் முதல் நோயாளிகள் வரை சுட்டுத் தள்ளுறது ,கற்பளிக்கிறது எல்லாம் ஜன நாயகமா வானம்பாடி.
அதற்காக நான் சும்மா எடுத்தவாக்கில மன்னிக்கனும், தவறு நடந்திடிச்சு அப்டீன்னு சொல்லவரல ...சொல்லவும்மாட்டன் ஏன் சுட்டான்,எதுக்கு சுட்டான், யார் இதற்கு காரணம் அப்டீன்னு யோசிச்சீங்கன்னா ....உங்களுக்கே நிலம புரியும்
சரி வானம்பாடி 2 ரூபா இல்லை இப்ப விலைவாசி எல்லாம் ஏறிட்டு இப்ப எவ்வளவு கர போட்ட வேட்டி?
அதுதாங்க கேக்கிறேன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிற சட்டங்கள் எப்படி ஜன நாயகம் ஆக முடியும்?இப்ப என்கொவுன்டெர் எண்டு சொல்லி படுகொலை செய்யுறீங்க அது எப்படீங்க ஜன நாயகமா முடியும்?தமிழ் நாடு போலிசு வன்புணர்வு செய்தா அது சட்டத்திற்கு உடபட்டதா?அப்ப கொலை செய்தா அதுவும் சட்டத்திற்கு உட்பட்டதா?என்னங்க உங்க ஜன நாயகம்?எல்லா ஜன நாயக மறுப்பையும் சட்டம் போட்டுச் செய்துட்டு அது ஜன நாயகம் என்கிறதில என்ன நியாயம் இருக்கு?
கருத்தாடல் களம் சம்பந்தமாக சோழியன் அவர்கள் தனது பதிவில் எழுதி இருந்தை வைத்தே சொன்னேன்.அதுபிழயாக இருந்தால் மன்னிக்கவும்.கள முகவரியத் தாங்க நான் வந்து பாக்கிறன்.
மற்றது ஏன் சுட்டான் எதுக்கு சுட்டான் எண்டு கேக்குறீங்களே, நாங்களும் கேக்கலாம் தானே ஏன் இங்கு வந்தாய் ,இந்த மண் எங்கள் சொந்த மண் என்று.யோசியுங்க?உங்க வீட்டில பக்கத்து வீட்டுக் காரன் வந்து உங்கள அடிச்சா நீங்க என்ன செய்வீங்க?

