11-06-2005, 10:51 PM
கிழக்கிலங்கையிலும் தேர்தல் பகிஸ்காரம் கோரும் பிரசுரம்
இலங்கையில் நடை பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கக் கோரும் துண்டுப் பிரசுரமொன்று இன்று கிழக்கு மாகாணத்தில் வெளியாகியுள்ளது.
"தமிழ் தேசிய ஒற்றுமை ஒன்றியம் மட்டக்களப்பு - அம்பாறை" என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த பிரசுரத்தில் மஹிந்த ராஜபக்சவோ, ரணில் விக்கிரமசிங்கவோ இருவரில் ஒருவர் பதவிக்கு வரலாம் என்றும், ஆனால் இவர்கள் எவரும் தமிழ் மக்களின் உரிமைகளை தந்து விடப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியன கொண்டு வரப்பட்டமை, சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பு மற்றும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வழங்கப்படாமல் தடுத்தமை, போன்ற விடயங்களும் சுட்டிக்க காட்டப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில் ஏற்கனவே பதவி வகித்த மற்றும் பதவியிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் தொடர்பாகவும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் தினமாகிய நவம்பர் 17 ம் திகதியை துக்க நினைத்து தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற வேண்டு கோளும் அந்த பிரசுரத்தில் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ் குடாநாட்டில் இது போன்ற பிரசுரங்களும் அறிக்கைகளும் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>