11-06-2005, 07:13 PM
தேர்தலில் வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரம் எம்மால் வெளியிடப்படவில்லை : யாழ். அரசியல்துறை விளக்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2005, 22:03 ஈழம்] [யாழ். நிருபர்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வாக்களிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரம் எம்மால் வெளியிடப்படவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
யாழ். மாவட்ட அரசியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் யாழ். மாவட்ட அரசியல்துறை வெளியிட்டதாக தெரிவித்து, சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்காமல் அதில் பங்குபற்றி வாக்களிக்குமாறு பொது மக்களை கோரும் பிரசுரங்கள் யாழ். மாவட்ட அரசியல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல.
சில தீய சக்திகள் தங்களது கபட நோக்கங்களுக்காக எமது பெயரைப் பயன்படுத்தி பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றன.
இத்தகைய பிரசுரங்கள் குறித்து யாழ். மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறையினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி> புதினம்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>