11-06-2005, 03:59 PM
Vasampu Wrote:தூயவன்என்ன வசம்பூ நீங்களுமா?
தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>
சிறீலங்காவில் சனநாயகமா? சின்னபுள்ளத்தனம அல்ல இருக்கு உங்க பேச்சு. இராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருத்தி ஆயுத முனையில் சிங்கள அரசும் அதன் கூலிகளும் தமிழர்களின் வாக்குக்களை பறிப்பதற்கு பெயர் சனநாயகம் என்றால். உங்கள் அறியாமையை என்னவென்பது. கொஞ்சமாவது மனசாட்சியோடு சிந்திக்கவேண்டாமோ?

