Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பக்கக் கதை: அவளின் இடம்!
#1
காலை எட்டரை மணி. ஒன்பதாவது படிக்கும் சங்கீதா பள்ளிக்குக் கிளம்பினாள். வீட்டை விட்டுப் புறப்படும் வேளையில் ரமேஷ் வந்தான். ரமேஷ் சங்கீதாவின் அண்ணனோட வகுப்புத் தோழன்.

"" குமார் போயிட்டானா...சங்கீதா''

""இப்பத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போறான்''

""சரி...பார்த்துக்கிறேன்..''

""எப்படி இருக்கீங்க... படிப்பெல்லாம் எப்படி இருக்கு''

""நல்லா போகுது''

இரண்டே வார்த்தைகளில் பதிலை உதிர்த்துவிட்டு சைக்கிளில் பறந்துவிட்டான் ரமேஷ்.

செருப்பை மாட்டிக் கொண்டு, படி இறங்கும் போது, " சங்கீதா 'ஓங்கிய குரலில் கூப்பிட்டாள் அம்மா.

""என்னம்மா...''

"" இங்க உள்ள வா..ஒரு விஷயம்..''

""என்னம்மா விஷயம்?''

""குமார் எங்கேன்னு கேட்டா..இல்லைன்னு சொல்லி நிறுத்த வேண்டியதுதானே...தேவை இல்லாத பேச்சு அவன்கிட்ட எதுக்குப் பேசுற.. இத்தன நாளும் பேசுனது சரி..இப்ப ..நீ பெரிய மனுஷி ஆனவ...அனாவசியமா ஆம்பளப் பயல்ககிட்டப் பேசக் கூடாது...தெரியிதா..''

""இப்ப என்னத்த அதிகமாப் பேசிட்டேன்..படிப்பு எப்படிப் போகுதுன்னுதான் கேட்டேன்..இதுக்குப் போய் அலட்டிக்கிடுற''- என்று சொல்ல வாயெடுத்தாள். ஆனால் சொல்லவில்லை. இதைச் சொன்னால் .... அவ்வளவுதான்.. அதுக்கு அரை மணி நேரம் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். அதனால் சரிம்மா என்று மட்டும் தலையாட்டிவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டாள்.

மாலை நேரம். சங்கீதாவின் அம்மா -ஆச்சி இருவருக்கும் ஏதோ வாக்குவாதம். ஊழல் இல்லாத அரசியல்வாதி இருக்கலாம். ஊரை ஏய்க்காத மந்திரி கூட இருக்கலாம். சண்டை சச்சரவுகள் வராத மாமியார்- மருமகள் இருக்க இயலுமா?

நிமிடத்திற்கு நிமிடம் இருவருக்கும் வாக்குவாதங்கள் வலுப்பெற்றதே தவிர குறைந்தபாடில்லை. தடித்த வார்த்தைகள் வெடித்துச் சிதறத் தவறவில்லை. மாறி ..மாறி இரண்டு பேரும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சங்கீதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

""ச்சே.. என்ன இது..இப்படி சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க ...யாராவது ஒருத்தர் பொறுத்துத்தான் போனா என்ன ...மாறி..மாறிப் பேசி ... ஏன் பேச்ச வளத்துக்கிட்டே போறீங்க..''

-பொறுமை இழந்து கத்தினாள் சங்கீதா.

இவள் நடுவில் புகுந்து இப்படி நியாயம் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

""எங்களுக்குப் புத்தி சொல்ற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா...பேசாமக் கெட..''

""நீ சின்னக் கழுத.. மொளச்சி மூணு எல விடல..இது மாதிரி சங்கதியில தலையிட இன்னும் காலம் கெடக்கு''

அம்மா-ஆச்சி இருவரும் ஒரே தொனியில் சங்கீதாவை அதட்டினார்கள்.

"காலையில் அம்மா, நீ பெரிய மனுஷி ஆம்பளப் பயல்களோட பேசக் கூடாதுன்னு சொன்னாங்க... இப்ப என்னடான்னா...ஆச்சியும் அம்மாவும் பெரிய மனுஷி மாதிரிப் பேசாத ...நீ சின்னக் கழுதைங்கிறாங்க...என்னோட எடம் எது..பெரியவளா..சின்னப் பிள்ளையா..' -

என்கிற எண்ணம் சங்கீதாவின் மனதைக் குழப்பியது.
ThanksBig Grininamani...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஒரு பக்கக் கதை: அவளின் இடம்! - by SUNDHAL - 11-06-2005, 03:16 PM
[No subject] - by tamilini - 11-06-2005, 04:56 PM
[No subject] - by Vasampu - 11-06-2005, 06:15 PM
[No subject] - by tamilini - 11-06-2005, 08:55 PM
[No subject] - by Rasikai - 11-06-2005, 09:08 PM
[No subject] - by Rasikai - 11-06-2005, 09:09 PM
[No subject] - by shobana - 11-06-2005, 09:24 PM
[No subject] - by shanmuhi - 11-06-2005, 09:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)