11-06-2005, 08:38 AM
<b>தமிழர் தாயக வாக்காளரின் மனநிலை புரியாது சிறிலங்கா அரசும், புலனாய்வுப் பிரிவும் திணறல்</b>
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் மன ஓட்டத்தினை நாடிபிடித்தறிய முடியாத நிலையில், விடுதலைப்புலிகள் எதிர்வரும் சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தல் குறித்து அலட்டிக்கொள்ளாதிருப்பது சிறிலங்கா அரசையும் அதனது புலனாய்வாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
நேற்றையதினம் அரச மற்றும் படை உயர் அதிகாரிகள் மட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவியதாகத் தெரியவருகிறது.
சிறிலங்கா புலனாய்வுப் பரிவினரின் ஒருபகுதி 'தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலைப் புறக்கணிப்பார்கள்' எனச் சொல்லிவர, இல்லை இல்லை 'இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகள் மக்களை ஏதோ ஒரு வாக்காளரைச் சுட்டிக்காட்டி அவருக்கு வாக்களிக்குமாறு சொல்லப்போகிறார்கள்' என்று மற்றொரு பகுதியும் தெரிவித்து வருகிறதாம்.
அதேவேளை, இதுபற்றி ஒரே வாரஇதழில் பல்வேறு தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளமையானது எவ்வளவு து}ரத்திற்கு சிங்கள தேசமானது, தமிழர் தேசத்தின் அரசியல் நகர்வுகள் குறித்துக் குழம்பிப்போயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.
<b>நன்றி:</b> த சண்டே ரைம்ஸ்
<b>தொகுப்பு:</b> திருமகள் (ரஷ்யா)