11-06-2005, 12:26 AM
<b>பாரீஸ் வன்முறையை அடக்குவது குறித்து பிரஞ்சு அமைச்சர்கள் ஆராய்கிறார்கள் </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051105145722parismarch.jpg' border='0' alt='user posted image'>
பாரீஸ் வன்முறைகளை
நிறுத்தக் கோரி ஊர்வலங்கள்
பாரீஸ் நகரின் பாராமுகப் புறநகர்ப் பகுதிகளில் ஆரம்பித்து இப்போது நாட்டின் வெளிப் பிரதேச நகரங்களுக்கும் பரவியிருக்கும் வன்முறை அலையை எவ்வாறு அடக்குவது என்று ஆராய பிரெஞ்சு மந்திரிகள் அவசரமாகக் கூடியுள்ளனர்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட 10 அமைச்சர்களும் கடந்த ஒன்பது இரவுகளாக நடந்து வரும் வன்முறைகளில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கிட்டனர். சுமார் தொள்ளாயிரம் கார்கள் தீ வைக்கப்பட்டுள்ளன, 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரங்கள் பெரும்பாலும் தொடங்கியது அரபு மற்றும் ஆபிரிக்க வம்சாவழியினர் வாழும் பாரீஸ் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051105102507parisriots.jpg' border='0' alt='user posted image'>
<i>வன்முறையும் தொடருகிறது</i>
இங்கு தொடங்கிய வன்முறைகள் பின் ஸராஸ்பூர்க், துலூஸ், றென் போன்ற வெளிப்பிரதேச நகரங்களுக்கும் தொற்றிக் கொண்டது.
பாரீஸ் நகரின் வட - கிழக்குப் புறநகர்ப் பகுதியொன்றில் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக ஒழிந்து கொள்ள முயன்ற இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்த விபத்தை அடுத்து இந்த வன்முறைள் ஆரம்பித்திருந்தன.
இவர்கள் இருவரையும் தாங்கள் துரத்திச் செல்லவில்லை எனப் போலீஸார் கூறுகின்றனர்.
வன்முறைகள் நின்று, அமைதி திரும்ப வேண்டும் என்று கூறி பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதி இரண்டில் இன்று ஊர்வலங்கள் நடக்கின்றன.
-BBC tamil