11-05-2005, 08:18 PM
முடிவில்லா போருக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முயன்று முற்றுப்பெறும்முன்
முகங்கள் இல்லா
முகவரி ஆகி
முதன்மையானீரே!
சில்லறை நாடும் உலகில்
கல்லறை நாடி
மகிழ்வாய் பயணித்து,
இளமை நாடும் மாந்தரில்
புதுமை தேடி
புயலாய் சென்றீரே!
ஊரறிய உலகறிய
உன்னத இலட்சியத்தை
உரிமையுடன் நிலை நாட்ட
தலைவனுக்கு உண்மையாய்
மக்களுக்கு ஊமையாய்
உறங்கிவிட்டீரே!
உங்கள் உறக்கம்
உரமாய் எம்விடிவுக்கு
உரமிட உணர்வுடன் நிமிர்கிறோம்.
முற்றுப்புள்ளி வைக்க
முயன்று முற்றுப்பெறும்முன்
முகங்கள் இல்லா
முகவரி ஆகி
முதன்மையானீரே!
சில்லறை நாடும் உலகில்
கல்லறை நாடி
மகிழ்வாய் பயணித்து,
இளமை நாடும் மாந்தரில்
புதுமை தேடி
புயலாய் சென்றீரே!
ஊரறிய உலகறிய
உன்னத இலட்சியத்தை
உரிமையுடன் நிலை நாட்ட
தலைவனுக்கு உண்மையாய்
மக்களுக்கு ஊமையாய்
உறங்கிவிட்டீரே!
உங்கள் உறக்கம்
உரமாய் எம்விடிவுக்கு
உரமிட உணர்வுடன் நிமிர்கிறோம்.

