11-05-2005, 06:00 PM
யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் மற்றும் அழைப்புகள்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் படை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளில் கடந்த கால ஜனாதிபதிகள் செய்த அராஜகங்களும் துரோகங்களும் மன்னிக்கமுடியாதவை என்றும், அனுபவங்கள் எமக்குப் போதும், எனவே எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை எனவும் அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் படை- யாழ் மாவட்டம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இன்னுமொரு சுவரொட்டியில் தமது தாய் மண்ணில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தச் சுவரொட்டி ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வலிகாமம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை எனச் சுட்டிக்காட்டி, இதனைப் புறக்கணிப்பதன் மூலம், சிங்களத் தலைமைகள் மீது, தமிழ் மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை சர்வதேச சமூகத்திற்குத் வெளிப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பதின்மூன்று வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆளும் கட்சியாகிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் நாட்டின் பிரதமராகிய மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்கவும் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.
இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
இந்த இரண்டு வேட்பாளர்களுமே சிங்களப் பேரினவாதச் சிந்தனை கொண்டவர்களாகவே தமது தேர்தல் அறிக்கைகளிலும், சிந்தனைகளிலும் வெளிக்காட்டியிருப்பதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒரு தெளிவான தீர்வை அவர்கள் முன்வைக்கவில்லை எனவும் வலிகாமம் பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>