Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிசில் தொடரும் கலவரங்கள்
#7
Quote:<b>பாரிஸ் வீதி வன்முறையின் பின்னணி பற்றிய கண்ணோட்டம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051104112201blaze_afp203index.jpg' border='0' alt='user posted image'>
பாரிஸ் வன்முறைகள்
குடியேற்ற சமூகம் அதிகம் வாழும் பாரீஸ் நகரின் பல புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக மிகத் தீவிரமாக வன்முறையும் பதற்றமும் நிலவிவரும் நிலையில், ஒழுங்கீனத்தை ஒடுக்கும் நோக்கிலும், அதேநேரம் நாட்டின் இனச் சிறுபான்மையினரிடம் புதியதொரு பேச்சுவார்த்தையை நடத்தும் நோக்கிலும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக பிரஞ்சு அரசு வாக்குறுதியளித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் பல பாகங்களிலிருந்து பிரான்சில் குடியேறியிருக்கும் சமூகங்கள் பயங்கரமான ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்டுவருகின்றன என்பதை ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டுமென்பது அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது.

பிரான்ஸ் முழுமையிலும் பார்த்தால், இந்த ஆண்டில் மட்டும் முப்பதாயிரம் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

பிரச்சினையான இடங்கள் என்று சொல்லப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை தொள்ளாயிரமாக இருக்கிறது.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051104090853051104_armazemparis203credito.jpg' border='0' alt='user posted image'>
தொடரும் வன்முறைகள்
அரபு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் கறுப்பின ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் வந்துள்ள குடியேறிகள் மற்றும் அக்குடியேறிகளின் பிள்ளைகள், இம்மாதிரியான இடங்களில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு கட்டுக்கடங்காமல் திரிகிறார்கள் என்று தெரிகிறது. இந்த இடங்களில் வேலை வாய்ப்பு இல்லை, இனரீதியான பாரபட்சமே இந்நிலைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

குடியுரிமை இல்லையென்றாலும்கூட நாட்டில் அதிக காலம் வாழ்ந்துவிட்டவர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது அவர்களின் குறைகளை நீக்குவது போன்ற மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பெரிய சட்ட சீர்திருத்தங்கள் வர வேண்டும் என்றும் சர்கோசி கூறியுள்ளார்.

-நன்றி: பீபீசீ தமிழ்
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:42 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:36 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:39 AM
[No subject] - by RaMa - 11-05-2005, 05:21 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 10:45 AM
[No subject] - by AJeevan - 11-06-2005, 12:26 AM
[No subject] - by AJeevan - 11-08-2005, 08:35 PM
[No subject] - by VERNON - 11-08-2005, 11:06 PM
[No subject] - by sabi - 11-08-2005, 11:14 PM
[No subject] - by shobana - 11-08-2005, 11:40 PM
[No subject] - by sathiri - 11-08-2005, 11:40 PM
[No subject] - by VERNON - 11-09-2005, 10:11 AM
[No subject] - by Netfriend - 11-09-2005, 10:56 AM
[No subject] - by AJeevan - 11-09-2005, 09:07 PM
[No subject] - by விது - 11-09-2005, 11:23 PM
[No subject] - by Mathan - 11-10-2005, 09:25 AM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:15 PM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)