Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிசில் தொடரும் கலவரங்கள்
#5
<b>பாரிஸ் வன்முறைகள் தொடருகின்றன</b>
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/europe_enl_1131113290/img/laun.jpg' border='0' alt='user posted image'>
<i>வன்முறைகள் தொடருகின்றன</i>

பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த எட்டு இரவுகளாக நடந்துவரும் வன்முறையின் அடித்தளமாக அமைந்துள்ள பிரச்சினைகள், கடந்த முப்பது வருடங்களாக உதாசீனப்படுத்தப்பட்டுவரும் பிரச்சினைகள் என்றும் இவற்றுக்கு தீர்வுகாண காலம் பிடிக்கும் என்றும் பிரஞ்சு உள்துறை அமைச்சர் நிக்கோலஸ் சர்கோரி கூறியுள்ளார்.

ஆவேசம்கொண்ட இளைஞர் கும்பல்கள் நேற்றிரவு ஐநூறுக்கும் அதிகமான கார்கள், ஒரு பேருந்துப் பணிமனை மற்றும் ஒரு ஜமக்காள சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான நேரடி மோதல் நேற்றைய இரவு குறைவாக இருந்தது என்பதால் வன்முறை முடிவுக்கு வருகிறது என்பதாக கருதிவிடமுடியாது என்று சர்கோரி இன்று கூறினார்.

பாதிக்கப்பட்ட அரபு இன மற்றும் ஆபிரிக்க இன சமூகங்களில் பிரச்சினைகளை உண்டுபண்ணும் கடும்போக்காளர்களை தனியாக ஒதுக்க முயல்வதாக அச்சமூகங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.

பாரீஸ் நகர வன்முறைகளைப் பின்பற்றி நேற்றிரவு முதல்முறையாக மற்ற சில இடங்களில் குறிப்பாக தெற்கிலுள்ள மர்சை நகரைச் சுற்றி வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:42 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:36 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:39 AM
[No subject] - by RaMa - 11-05-2005, 05:21 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 10:45 AM
[No subject] - by AJeevan - 11-06-2005, 12:26 AM
[No subject] - by AJeevan - 11-08-2005, 08:35 PM
[No subject] - by VERNON - 11-08-2005, 11:06 PM
[No subject] - by sabi - 11-08-2005, 11:14 PM
[No subject] - by shobana - 11-08-2005, 11:40 PM
[No subject] - by sathiri - 11-08-2005, 11:40 PM
[No subject] - by VERNON - 11-09-2005, 10:11 AM
[No subject] - by Netfriend - 11-09-2005, 10:56 AM
[No subject] - by AJeevan - 11-09-2005, 09:07 PM
[No subject] - by விது - 11-09-2005, 11:23 PM
[No subject] - by Mathan - 11-10-2005, 09:25 AM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:15 PM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)