Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிசில் தொடரும் கலவரங்கள்
#4
vasisutha Wrote:என்ன பிரச்சினை? எனக்கு தலையும் புரியேல்லை
வாலும் புரியேல்லை.. :?
Quote:இந்த கலவரங்களுக்கு முன்னர் என்ன நடந்ததென்று சற்று விரிவாகப் பார்த்தால், முதல் நாள் இரவு 19.15 மணிபோல் பொலிஸார் வீதி சோதனைகளில் இருந்த போது, இரு வெளிநாட்டுக்காரர்கள் பொலிஸ்காரர்களை கண்டதும் ஓடத்தொடங்கி இருக்கின்றார்கள். அவர்களை பிடிப்பதற்காக விரட்டிச்சென்ற போது அவர்கள், அதிஉயர் மின்சார மற்றி இருக்கும் இடத்திற்குள் சுவரேறிக் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.

அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் அதேஇடத்தில் பழியானர்கள்.
இவர்கள் பழியானதற்கு பொலிஸ்தான் காரணம் என்று, அவர்களது சகாக்கள் முதலில் சிறிய வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனை தொடர்ந்து அந்த நாட்டுக்காரர்களும்,அவர்களைத் தொடர்ந்து அவர்களை சார்ந்த மற்றைய வெளிநாட்டவர்களும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது வரை 200 அதிகமாக வாகனங்களை தீயிட்டு எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை வெளிநாட்டு நபர்களின் சங்கங்கள்! தங்களுக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

இந்த சப்பவம் நிகழ்ந்த இடம் CLICHY SOUS-BOIS. பரிஸை சூழவுள்ள புறநகர் பகுதியில் நிகழ்ந்தது. அதன் தொடர்ந்து அண்டை ஊர்களிலும்(Seine-Saint-Denis ,AULNAY-SOUS-BOIS) கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தப் பகுதியில், அனேகமான வாழ்பவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் சட்டவிரோதமான வியாபாரங்கள்,களவுகள்,கொள்ளைகள் என்பன பலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களை சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

எப்படியும் இரண்டொரு நாட்களில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
- நன்றி :றெனி ( நிலா முற்றம்)

<span style='font-size:22pt;line-height:100%'>இது பற்றிய உண்மை விபரங்களை அறிந்து கொள்வதற்காக
இன்று , என்னுடன் வேலை செய்யும் ஒரு பிரெஞ்சு வைத்திய அதிகாரியோடு பேசினேன்.

அவர் \"இங்கே வன் முறையில் இறங்கி இருக்கும் இளைஞர்கள் வெளி நாட்டுக்காரர்கள் அல்ல.
அவர்களும் பிரெஞ்சுக்காரர்களே.
அதாவது அவர்களது பெற்றோர் வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஆனால் இப்போது அவர்களுக்கும் பிரெஞ்சுக் குடியுரிமையுண்டு.

இப்போது பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள்
பிரான்சில் பிறந்து - வளர்ந்து - படித்த இளைஞர்கள்.
இவர்கள் வெளி நாட்டவர் போல் வாய் மூடி மெளனமாக வேலை செய்யக் கூடியவர்கள் அல்ல.
தவறுகளை பிரெஞ்சு நாட்டவர் போல் தட்டிக் கேட்பவர்கள்.
இது பலருக்கு பிடிப்பதில்லை.

இவர்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அமுல்படுத்தாத காரணத்தால்
இவர்கள் வேலை வாய்ப்புகள் இன்றியே அலைகிறார்கள்.

வெளி நாட்டவர் போல் இவர்களை நடத்துவதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இவர்களது பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் கொண்ட காரணத்தால் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
எனவே வேலை வாய்ப்புகளற்று சுற்றித் திரிய வேண்டியுள்ளது.

இளைஞர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை அந்த அரசுக்கு உண்டு.
அது அங்கு நடை முறையில் இல்லை.
ஒரு நாட்டின் குடியுரிமை மட்டும் ஒரு மனிதனுக்கு போதாது.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

இனியும் இதைக் கணக்கிலெடுக்கா விட்டால் பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டி வரும்\" என்றார்.

<b>யோசிக்க வேண்டிய விடயம்?</b></span>
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:42 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:23 PM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:36 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 02:39 AM
[No subject] - by RaMa - 11-05-2005, 05:21 AM
[No subject] - by AJeevan - 11-05-2005, 10:45 AM
[No subject] - by AJeevan - 11-06-2005, 12:26 AM
[No subject] - by AJeevan - 11-08-2005, 08:35 PM
[No subject] - by VERNON - 11-08-2005, 11:06 PM
[No subject] - by sabi - 11-08-2005, 11:14 PM
[No subject] - by shobana - 11-08-2005, 11:40 PM
[No subject] - by sathiri - 11-08-2005, 11:40 PM
[No subject] - by VERNON - 11-09-2005, 10:11 AM
[No subject] - by Netfriend - 11-09-2005, 10:56 AM
[No subject] - by AJeevan - 11-09-2005, 09:07 PM
[No subject] - by விது - 11-09-2005, 11:23 PM
[No subject] - by Mathan - 11-10-2005, 09:25 AM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:15 PM
[No subject] - by AJeevan - 11-11-2005, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)