11-04-2005, 11:50 PM
vasisutha Wrote:எறும்பு ஊர கல்லும் தேயும்.
ஆனைக்கும் அடி சறுக்கும்...
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
குரங்கு கையில் பூமாலை போல.
அடியாத மாடு படியாது.
எறும்பூரக் கல் தேயும் என்றால் இப்ப உங்கட அம்மா ஒரு விடயத்தை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார் ஆனால் நீங்கள் விடுவதா இல்லை திருப்ப திருப்ப அந்த விடயத்தை பற்றி கதைத்து சம்மதம் பெறுகிறீர் செய்வத்தற்ற்கு . அதாவது உம்மட அம்மாவின் மனதை இளக்கச் செய்கிறீர் அதைத்தான் சொல்லுறது எறும்பூரக் கல் தேயும் என்று.
ஆனைக்கும் அடி சறுக்கும் என்றால். எந்த பெரியவர்கள் என்றாலும் சிலவேளைகளில் பிழை விடுவதுண்டு,
பூனை கண்ணை மூடினால் இருண்டு விடுமா? என்றால் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டுதான் பால் குடிக்குமாம் ஏன் என்றால். கண்ணை திறந்தால் தன்னை யாரும் பார்த்துவிடுவார்கள் என்று. அதாவது ஒரு குறுகியவட்டத்தில் வாழ்வதைக்குறிக்கும்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்றால். அதாவது யானை இருக்கும் போதும் உங்களுக்கு பயன் கிடைக்கும் அதே மாதிரி அது இறந்தாலும் அதன் தந்தங்கள் போன்றவற்றை வித்து பயன் பெறலாம்.
மிச்சத்தை யாரவது சொல்லுங்கோ எனக்கு கை நோகுதுப்பா
<b> .. .. !!</b>

