11-04-2005, 10:35 PM
பெப்சி அண்ணா......கார்ல் மார்க்ஸ் முதலிலயே சொல்லிட்டார் முதலாளித்துவம் ஒருகட்டத்தில தன்னைத்தானே அழிச்சுக்கொள்ளும் எண்டு.... அந்தக் காலத்த தான் அமெரிக்கா நெருங்கிக்கொண்டு இருக்கு... முதலாளித்துவம் பார்க்க கவர்ச்சியாத் தான் தெரியுமண்ணா...எல்லாருமே பணக்காரராகிற மாதிரித்தான் காட்டுமண்ணா....ஆனா உண்மைல பணக்காரர் மட்டும் இன்னும் பணக்காரராவும்....ஏழையள் இன்னும் ஏழையளாவும் போய்க்கொண்டிருப்பினம்.... இரண்டு பேருக்கும் இடையில இடைவெளி கூடிக்கொண்டே போகும்.... இதின்ர உச்ச கட்டத்தில முதலாளித்துவம் தன்னத்தானே திண்டிடும்....கடைசில புரட்சி வெடிக்கும்....மாற்றங்கள் வரும்.... இதுக்குள்ள அறிவாளிகளால இப்ப தீர்மானமா ஒண்ட சொல்ல முடியாது....அவர்களும் கருத்து பரிமாற்றத்த செய்து ஒரு யோசனைய முன்வைக்கலாம்... சில பரிசோதனைகள செய்து பாக்கலாம்... ஆனா வெற்றி தோல்வியெண்டுறது அந்தந்த சமூகத்தளங்களயும் காலத்தையும் பொறுத்ததண்ணா.....

