11-04-2005, 07:05 PM
இவர்களுக்கு ஊடகம் என்பது என்ன என்று தெரியவில். ஐரோப்பிய ஊடககங்களின் பணியை தமிழ் ஊடககங்கள் செய்ய முடியாது. ஐரோப்பிய ஊடகங்கள் தமது பணியை சரிவர செய்யவில்லை. என்று அவர்களின் நிர்வாகத்துக்கு அறிவிப்பதை விட்டு தமிழ் ஊடக வியலாளர்களை குறை சொல்வதில் என்ன இருக்கிறது? இப்படியான கூக்குரல்களால தான் தமிழ் ஊடககத்துறை இன்னும் வளராமல் இருக்கறது. பல திறமையானவர்கள் தாமும் தமது பாடும் என்றிருக்கின்றனர். வட அமெரிக்காவில் அந்த நாட்டு ஊடகங்கள் எங்கள் நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கியம் கொடுக்கிறது. அதற்க்கு காரணம் தமிழ் ஊடககங்கள் அல்ல மக்கள். உங்களை போன்ற மக்கள் ஊடகங்கள் மீத பழி சொல்லவே இருக்கின்றனர். ஆனால் அந்த நாட்டு ஊடகங்களுடன் நெருங்கி அவர்களுடன் கருத்து பரி மாற்றங்களில் குறிப்பாக நிகழ்ச்சிகள் பற்றிய அபிப்பிராயங்கள்...கருத்தெடுப்புக்கள் என்று பலவற்றையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம்... அவர்களுக:கு தமிழர்களும் எமது ஊடகத்தை கேட்கிறார்கள் பார்க்கிறார்கள் எனவே அவர்களது நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஆசை வரும்.. அதே போல அரசியல் hPதியிலும் கட்டிகளுடன் இணைந்து தமிழர் செயற்ப்படவேண்டும் அதை விடுத்து வெறுமனே தமிழ் ஊடகங்கள் மீத பழி போடுவதல் எந்த பயனும் இல்லை. இதற்க்கு ஒரு உதாரணமாக கனடிய தமிழர்களை எடுத்து கொள்ளுங்கள். ...(அவர்களே இன்னும் வளர்வதற்க்கு நிறை இருக்கிறது) அங்கே பொங்கு தமிழ் நடந்த போது அதை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது கனடிய ஊடககங்கள்... குறிப்பாக CityTV, CP24 மற்றும; 680AM OmniTV அதை விட பத்திரிகைகள்.. அதே போல சுனாமி தொடர்பாக நடந்த நிகழ்வுகள்...மற்றும் பல முக்கியமான நிகழ்வுகளாக அவர்கள் கருதும் நிகழ்வுகள் பற்றி அறிவித்தார்கள். அதற்க்கு காரணம் தமிழர்கள் இங்கிருக்கும் சமூதாயத்துடன் ஒன்றித்து தமது தனித்துவத்தை இழக்காமல் அதே நேரம் மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்ப்படுவதோடு..கனடிய ஊடகங்களுடன் அவர்கள் இணைந்து செயற்ப்படகின்றனர்... இங்கும் சன்TV இருக்கிறது..ஜெயாTV இருக்கிறது. T.V.I இருக்கிறது..மாருதி TV இருக்கிறது...அவற்றை மட்டுமே பாhத்து என்ன செய்ய முடியும்..... கொஞ்சம்..உங்களை சற்றி என்ன நடக்கிறது என்று அறிய உங்கள் நாடுகளின் தொலைக்காட்டி..வானொலி போன்ற ஊடககங்களையும் பாருங்கள் கவனியுங்கள்..நீங்கள் அவர்களின் நேயர்கள் வாசகர்கள் என்று அவர்கள் உணரும் போது உங்கள் அழைப்பின்றியே அவர்கள் உங்கள் நிகழ்வுகளுக:கு முன்னுரிமை கொடுப்பார்கள்...
[size=18][b]" "

