Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வறுமை
#1
அன்று அமெரிக்க ஜனாதிபதியான லின்டன் ஜோன்சன் வறுமைக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்து நாற்பது வருடங்களின் பின் உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் மூன்று கோடி எழுபது இலட்சம் மக்கள் வறியவர்களென உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்த வண்ணமாயுள்ளது.

சென்ற வருடம் ஒரு கோடி பத்து இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்று விட்டனர். இந்தத் தொகையானது டல்லஸ் அல்லது பிராக் நகரங்களின் மொத்த சனத்தொகைக்குச் சமமாகும்.

2000 ஆம் ஆண்டிலிருந்து வருடந் தோறும் வறியவர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து (55) இலட்சத்தால் அதிகரித்துள் ளது. ஜனாதிபதி லின்டன் ஜோன்சன் வறுமைக்கு எதிரான யுத்தத்தை அன்று பிரகடனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, "துரதிர்ஷ்டமாக பல அமெரிக்கர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். சிலர் வறுமை காரணமாகவும் சிலர் அவர்களுடைய நிறம் காரணமாகவும் இவர்களிற் பலர் இரண்டு காரணங்களாலும் இவ்வாறான நம்பிக்கையீன நிலைக்கு உள்ளாகி உள்ளனர். அமெரிக்க நிர்வாகம் அமெரிக்காவில் வறுமைக்கு எதிராக நிபந்தனையற்ற யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது,". என்று கூறினார்.

சென்ற வருடம் அமெரிக்க சனத் தொகையில் 12.7 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வருடந்தோறும் அமெரிக்க புள்ளி விபரத் திணைக்களம் அமெரிக்காவில் நிலவும் வறுமை தொடர்பாக புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த விபரங்கள் சுமார் எழுபது (70) பக்கங்களில் இருக்கும். இவை ஆய்வாளர்களுக்குத் தேவையானதாக இருந்த போதிலும் அவை பொது விவாதங்களை என்றுமே ஏற்படுத்தியதில்லை. 2005 ஆம் ஆண்டின் அறிக்கையும் அவ்வாறே அமைந்துள்ளது.

இந்த அறிக்கையானது லூசியானா, மிசுசிப்பி ஆகிய இடங்களில் 1100 பேருக்கு அதிகமானோரை பலி கொண்டு பெரும் நாசத்தை விளைவித்த கத்ரீனா சூறாவளியின் போது நீயூ ஓர்லின்சில் நிலவிய நிலைமையை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பக்கம் பக்கமாக புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களில் இவை காணப்படவில்லை என்ற உண்மை அதன் ஊடாக அம்பலத்திற்கும் வந்தது.



நீயூ ஓர்லின்ஸ் காட்சிகள் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. வெட்கித் தலைகுனிந்த அமெரிக்கர்கள் சோமாலியா, அங்கோலா, சூடான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் தங்கள் நாட்டை ஒப்பிட நேர்ந்ததை ஒரு அவமானமாகக் கருதினர்.

வறிய கறுப்பின மக்கள் உதவி கோரி பிச்சை கேட்ட காட்சிகள் காட்டப்பட்டன. ஏனோதானோ என்ற தோரணையில் நேரம் கடந்து வந்து சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீயூ ஓர்லின்சின் ஏகப் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள். வெள்ளத்தின் போது கிட்டத்தட்ட சகல வெள்ளையர்களும் சொந்தக்கார்களிலும் பணமுடையவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களிலும் ஓடித் தப்பினர். ஆனால் வாகன வசதியற்ற ஒரு லட்சம் கறுப்பின மக்கள் வெள்ளம் புகுந்த நகரத்திலேயே மாட்டிக் கொண்டனர்.

வறுமையில் வாடும் கறுப்பின மக்கள் 24.7 வீதமாகும். இது வெள்ளையர்கள் உட்பட ஏனைய இனத்தவர்களிடையே நிலவும் வறுமையின் இரட்டிப்பான வீதமாகும். அமெரிக்காவில் தற்போது பொருளாதார ரீதியான புறக்கணிப்பை கறுப்பின மக்களே அதிகம் எதிர்நோக்குகின்றனர். நகரின் ஒரு புறத்தில் வறிய கறுப்பின மக்களும் மறுபுறத்தில் வசதிபடைத்த வெள்ளையரும் என்ற மிகத் தெளிவாக அடையாளம் காணக் கூடிய ஏற்றத்தாழ்வு நிலை அங்கு காணப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இந்தப் பொருளாதாரப் புறக்கணிப்பு காணப்படுகிறது. நியூயோர்க், பிலோடெல்பியா, டெற்றோயிற், அற்லான்ரா, பால்ரிமோர், சென்லியூஸ், ஓக்லாண்ட், மியாமி ஏன் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்தப் புறக்கணிப்பு அப்பட்டமாகக் காணக்கூடியதாயுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து வாகனத்தில் பத்து நிமிடப் பிரயாணம் செய்தால் அனாகோசியாவை அடையலாம். இது நகரின் மிகமோசமான வறுமை நிலவும் ஒரு இடமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் வறிய கறுப்பின மக்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கு வறிய வெள்ளையர்கள் முழு அமெரிக்காவிலும் உள்ளனர். கறுப்பின மக்களிலும் பார்க்க வேகமாக வெள்ளையர்கள் வறுமைக் கோட்டிற்கு தள்ளப்படுகின்றனர். அரசாங்கம் காலாவதியான 1963 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட வறுமை மட்ட அளவு கோலையே இன்றும் பயன்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வறுமையாளர்களின் உணவு, உடை உட்பட வீட்டு வாடகை தற்போது பெரிய செலவாகின்றது. வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கானோர் கார்களிலும், நீண்ட தூர புகையிரதங்கள், பஸ்களிலும் சிறிய கொட்டில்கள் போன்றவற்றிலும் உறங்குகின்றனர். வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளில் நிலவும் வறுமையை விட அமெரிக்காவின் வறுமை மிக மோசமானது. "ஒவ்வொரு ஆகஸ்டிலும் அமெரிக்கர்களாகிய நாங்கள் எங்களுக்கே பொய் சொல்லுவோம்" என டியூக் பல்கலைக்கழகத்தில் வறுமை பற்றி ஆய்வு நடாத்தும் பேராசிரியர் டேவிட் பிராடி கூறுகிறார்.

வறுமைக்கெதிரான யுத்தத்தில் அரசு வெற்றி பெறுவதாகக் காட்டுவதற்காகவே வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுகின்றனர்.

சகலதையும் கணக்கில் எடுத்தால் 18 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர். அதாவது 4 கோடி 80 இலட்சம் பேர் வறியவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நிலவும் வறுமையானது வேறு எந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க மோசமானது. உலகில் உள்ள 41 கோடி 60 இலட்சம் பேரின் வருமானத்தின் அளவு உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்களின் வருமானத்திற்குச் சமமாகும். வெளிநாடுகளில் இரு ந்து வேலை வாய் ப்பு பசியுள்ளவர்களை இழுப்பதற்கு அமெரிக்காவில் வருடந்தோறும் 50,000 பேருக்கு நிரந்தர வதிவிடத்திற்காக நடத்தப்படும்"கிறீன் கார்ட்" லொத்தர் முறையுள்ளது. இது போன்று உலகில் வேறெங்கும் இல்லை.

அக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து மணித்தியாலம் ஒன்றிற்கு ஆகக்குறைந்த ஊதியம் 15 சதங்களால் அதிகரிக்கப்பட்டு 6.35 டொலர்களாகவுள்ளது. இந்த ஊதியம் ஒருவரை வறுமையின் எல்லைக் கோட்டிற்கு மேலே கொண்டு செல்லாது. சுகாதாரக் காப்புறுதி அல்லது விடுமுறை இல்லாமலும் ஆரம்பக் கல்வியை மட்டும் பெற்ற இலட்சக்கணக்கானவர்க்கே இந்த மாதிரியான குறைந்த ஊதிய வேலையே கிடைக்கும்.

ஒரு காலத்தில் கனரக கைத்தொழிலில் பயிற்சிபெறாதவர்கள் நல்ல ஊதியம் பெற்றனர். அது இப்போது அற்றுப் போய்விட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 27 இலட்சம் உற்பத்தித் தொழிலில் வேலைவாய்ப்பு இழக்கப்பட்டது.

ஒரு ஜனாதிபதி வறுமைக்கு எதிரான யுத்தத்தைப் பிரகடனம் செய்தார். மற்றொரு ஜனாதிபதியான றொனால்ட் றேகன் 1988 இல் ஓர் உண்மையைக் கூறினார்"சமஷ்டி அரசு வறுமைக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தது ஆனால் வறுமையே வெற்றி கண்டது
http://www.thinakural.com/New%20web%20site...4/Article-1.htm
Reply


Messages In This Thread
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வறுமை - by adsharan - 11-04-2005, 09:42 AM
[No subject] - by pepsi - 11-04-2005, 10:16 AM
[No subject] - by poonai_kuddy - 11-04-2005, 10:35 PM
[No subject] - by Eelavan - 11-05-2005, 06:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)