11-04-2005, 03:54 AM
பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகி வரும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் தனது கணவரை அடித்த குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் ரிபிகா வடே (37). இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்தப் பதவியில் உள்ளார். இதற்கு முன் இந்த பத்திரிகையின் துணை நிறுவனமான " நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
இவரது கணவர் ரோஸ் கெம்ப்(41). இவர் பிரிட்டனில் பிரபல "டிவி' நடிகர். பி.பி.சி.,யில் வெளியாகும் பிரபல தொடர் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில், கணவரை அடித்த குற்றத்திற்காக "சன்' பத்திரிகை ஆசிரியர் ரிபிகா வடே நேற்று கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லண்டன் போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"" லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலை 4 மணிக்கு அழைப்பு வந்தது. அப்போது பெண் ஒருவர் கணவரை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்' என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட பெண் ரிபிகா வடே தான் என்று கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி " சன்' பத்திரிகை தரப்பில் இருந்தோ, ரோஸ் கெம்ப் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
Thanks
inamalar..........

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............