11-26-2003, 07:12 PM
<img src='http://nowrunning.com/comingsoon/kakkakakka/07.jpg' border='0' alt='user posted image'>
என் உயிரானவள்...
என்றைக்கு என்னுள் புகுந்தாய்
இன்றுவரை நினைவில்லை....
என்சுவாசத்தோடு சுவாசமாய்
உள்ளே சென்று
இன்று என்னையே
உரிமைகொண்டாடுகிறாய்..
இரவிலே வருகின்ற
மலேரியாக் காய்ச்சல்போல
மாலையில் தான்
உன் காதல் என்னை
வாட்டிவதைக்கிறது..
படிக்கிறேன் என்று
மற்றவர்க்கு பாவனைசெய்து
உன்பெயரை எழுதிவைத்து
உன்னுடன் பேசிக்கொண்டு
இருப்பேன்...
எழுதாதபேனாவை
எழுதிப்பார்க்கக்கூட
உன்பெயர்தான் எழுதுகிறேன்...
தனிமையில்தான்
என்மேல் இரக்கம் கொள்கிறாய்...
புன்னுறுவல் செய்கிறாய்...
பார்க்காமல் பார்க்கிறாய்...
உன்விழியை
எதிர் எதிர் சந்திக்க
எத்தனைதான்
முயன்றாலும்
ஒரு நொடியிலேயே
ஆண்பிள்ளைநான்
தோற்றுப்போகிறேன்..
ஆண்டவன் சந்நிதியில்
நிம்மதி கிடைக்கிறது
உண்மைதான்
உன் சந்நிதியில்
ஒரு நொடியே கூட
மோட்சம் தருகிறது...
என் உயிரானவள்...
என்றைக்கு என்னுள் புகுந்தாய்
இன்றுவரை நினைவில்லை....
என்சுவாசத்தோடு சுவாசமாய்
உள்ளே சென்று
இன்று என்னையே
உரிமைகொண்டாடுகிறாய்..
இரவிலே வருகின்ற
மலேரியாக் காய்ச்சல்போல
மாலையில் தான்
உன் காதல் என்னை
வாட்டிவதைக்கிறது..
படிக்கிறேன் என்று
மற்றவர்க்கு பாவனைசெய்து
உன்பெயரை எழுதிவைத்து
உன்னுடன் பேசிக்கொண்டு
இருப்பேன்...
எழுதாதபேனாவை
எழுதிப்பார்க்கக்கூட
உன்பெயர்தான் எழுதுகிறேன்...
தனிமையில்தான்
என்மேல் இரக்கம் கொள்கிறாய்...
புன்னுறுவல் செய்கிறாய்...
பார்க்காமல் பார்க்கிறாய்...
உன்விழியை
எதிர் எதிர் சந்திக்க
எத்தனைதான்
முயன்றாலும்
ஒரு நொடியிலேயே
ஆண்பிள்ளைநான்
தோற்றுப்போகிறேன்..
ஆண்டவன் சந்நிதியில்
நிம்மதி கிடைக்கிறது
உண்மைதான்
உன் சந்நிதியில்
ஒரு நொடியே கூட
மோட்சம் தருகிறது...

