11-03-2005, 05:58 PM
Mathuran Wrote:வணக்கம் கள உறவுகளே!
களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு.
களவாயில் பகுதில் புதிதாக இணைத்த கிளைப்பகுதிகள் வரவேற்கப்படவேண்டியவை. அத்தோடு உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தொடர்வது----> களவாயிலில் உள்ள கிளைப்பகுதிகளில் ஆங்கிலத்தில் தற்போது இருக்கின்ற சொற்களை (சினிமா, வீடியோ) தமிழில் எழுதுவதில் ஏதும் சிரமம் இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின் அறியத்தரவும்.
பலசிரமங்களுக்கு மத்தியிலும் தமிழ்ச்சேவை புரியும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத்தெரிவித்து, யாழோடு மீண்டும் இணையும் வரை.
மதுரன்
வணக்கம் மதுரன்,
தாமதமாக பதிலுக்கு மன்னிக்கவும். சினிமா, வீடியோ ஆகிய சொற்களுக்கு சரியான தமிழ்ப்பதத்தை பரிந்துரைசெய்யுங்கள். பொருத்தமாக இருந்தால் நிச்சயமாக இணைக்கிறோம்.
நன்றி

