Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே தெரியாது"- சானியா
#1
சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே தெரியாது"- சானியா மிர்சா கொடுத்த ஷாக்!
- 02.11.2005
By JBR
ஒரு பக்கம் ஸ்கர்ட் அணியாதே என மிரட்டும் இஸ்லாமிய பழமைவாதிகள். மறுபக்கம், விளையாட்டை கோட்டைவிட்டு விளம்பரத்தில் கவனம் செலுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு.மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருந்தவரிடம் மைக்கை நீட்டி, சினிமாவில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் நிருபர்.

<img src='http://img481.imageshack.us/img481/3019/02112005thn11image21xa.jpg' border='0' alt='user posted image'>




அவ்வளவுதான்!



சுழன்று அடித்துவிட்டது டென்னிஸ் சூறாவளி! "முப்பத்தி ஒன்றாவது இடத்துக்கு முன்னேறிய பிறகும் எனக்கு சரியான ஸ்பான்சர்ஸ் கிடைக்கலை. தங்குற செலவு, பிரயாண செலவு, உபகரணங்கள் வாங்குவது என்று ஒரு வருடத்துக்கு மூன்று கோடிரூபாய்க்கு மேல் எனக்கு தேவைப்படுது. விளம்பரங்கள் மூலமாகத்தான் இதை நான் சம்பாதித்தாக வேண்டும். தவிர விளம்பரத்தில் நடிப்பதற்கு வருடத்தில் 25 நாள்களுக்கு மேல் நான் செலவழிப்பதில்லை." மூக்கும் முக்குத்தியும் சிவந்துப்போக, தனது கோபப்பார்வையை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாரின் பக்கம் திருப்பினார் சானியா.



"கொல்கத்தாவில் நடந்த மேட்சுக்கு ஆயிரத்து ஐநூறு போலீஸாரை செக்யூரிட்டிகளாக போட்டிருந்தார்கள். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. என்னை 'செலிபிரிட்டி'யாக்கி செய்யும் அனைத்தும் எனக்கு தொந்தரவானவைதான்".





சானியாமிர்சாவின் கடைசி சர்வீஸ் சிம்புவுக்கு! சானியா மிர்சாவை எப்படியும் நடிக்க வைப்பேன் என்று இவர் சவால் விட்டு அதிகநாள் ஆகாத நிலையில், சிம்புவை பெயரை குறிப்பிட்டே நோஸ்கட் செய்திருக்கிறது இந்த டென்னிஸ் ராக்கெட்!



"சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே எனக்கு தெரியாது. பிறகு எப்படி இது போன்ற செய்திகள் வெளியாகிறது என்று எனக்கு தெரியவில்லை. டென்னிஸில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காக சின்ன வயசிலிருந்தே பல தியாகங்கள் செய்து வருகிறேன். நடிப்பது குறித்து நான் சிந்தித்ததே இல்லை."



முதல் பந்திலேயே சிம்புவின் விக்கெட் எகிறிவிட்டது. சிம்புவுக்கு ராசி கிரிக்கெட்தான், சானியா.... ஐஸ்ட் லீவ் இட் யா!

http://tamil.cinesouth.com/masala/hotnews/...2112005-1.shtml
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
சிம்புன்னு ஒரு நடிகர் இருப்பதே தெரியாது&quot;- சானியா - by வினித் - 11-03-2005, 12:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)