Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆறு மாதமாக துõங்குகிறார் நவீன கும்பகர்ணன் கிச்சுக்கிச்சு' மூ
#1
துõங்காதே தம்பி துõங்காதே' என்று பாடினால் மட்டுமல்ல, கிச்சுக்கிச்சு மூட்டினாலும், கை, காலை பிடித்து இழுத்தாலும், படுக்கையை விட்டே தள்ளினாலும், இந்த மனிதர் எதற்கும் அசைந்து கூட கொடுப்பதில்லை. தொடர்ந்து கொர்ர்ர்...தான் பெரும்பாலான நேரம் அமைதியாக, சில சமயம் குறட்டையும் விட்டபடி, துõங்கிக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு நேரம் தெரியுமா? நேரமா... ஒரு நாளல்ல, ஒரு வாரமல்ல, ஆறு மாதமாக...! என்ன வாயடைத்து விட்டீர்கள். உங்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும், இது மருத்துவத்திற்கே சவாலாக தான் இருக்கிறது. மருத்துவ அபூர்வம் என்றும் கூறுகின்றனர்.

மத்தியபிரதேசம் குனா மாவட்டத்தில் உள்ளது கோன்யாடங் கிராமம். இங்கு வசித்து வருபவர் சந்தன் சிங். வயது 45. விவசாயி என்றாலும், ஏதோ அவ்வப்போது கூலி வேலைக்கு போய்த்தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த ஆறு மாதமாக இவர் வீட்டில் துõங்கிக் கொண்டே இருக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும், அவர் எழுந்திருக்கவே இல்லையாம். இதுபற்றி இப்போது தான் போலீஸ் மூலம் டாக்டர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுவரை அவர் மனைவியோ, உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சந்தன் சிங் அடிக்கடி காணாமல் போய் விடுவாராம். சில நாட்கள் கழித்து, ஏகப்பட்ட பழங்கள், காய்கறிகள் என்று மூட்டையுடன் வருவாராம். அப்போது சில சமயம் மணிக்கணக்கில், நாட்கணக்கில் கூட துõங்குவாராம். எழுந்திருக்கவே மாட்டாராம். எழுப்பினாலும், அவரால் எழுந்திருக்க முடியாதாம்.

எப்படி காணாமல் போகிறார்? எப்படி திரும்பி வருகிறார்? எங்கு இருந்தார்? என்பதெல்லாம், மனைவி கங்காபாய்க்கும் அவர் இரு குழந்தைகளுக்கும் தெரியவே தெரியாதாம். கிராமத்தினரும், "சந்தன் சிங்கிடம் அபூர்வ சக்தி உள்ளது. அதனால் தான் அவர் திடீர் என்று மாயமாகி விடுகிறார். அவர் துõங்குவதும் அப்படித்தான் . அவர் நவீன கால கும்பகர்ணன்' என்று பயபக்தியுடன் கூறுகின்றனர்.

"அவர் இப்படி பல மணி நேரம் அடிக்கடி துõங்குவது வழக்கம் தான். இதற்கு முன்பு ஒரு வாரம், பத்து நாள் என்று கூட தொடர்ந்து துõங்கி

இருக்கிறார். அதனால், அவருக்கு எந்த வியாதியும் இல்லை, துõக்கம் தான் வருகிறது. அதற்கு காரணம், அவரிடம் இருக்கும் அபூர்வ சக்தியாக இருக்கலாம்' என்று அவர் குடும்பத்தினரே நம்பினர்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு ஒரு நாள், திடீர் என்று வீட்டுக்கு வந்து, பழங்களை கொடுத்து விட்டு படுக்கையில் படுத்தாராம். அப்பறம் எழுந்திருக்கவே இல்லையாம். சில சமயம், அமைதியாக துõங்கிக் கொண்டு இருப்பாராம். சில சமயம், குறட்டை விடுவாராம். முன்பெல்லாம், தினமும் இல்லாவிட்டாலும், இரண்டு நாளுக்கு ஒரு முறை, குளிக்க வைத்து, உடை மாற்றுவாராம் கங்காபாய்.

அப்படியே, கடந்த நாட்களில் வாரத்துக்கு ஒருமுறை குளிக்கவைத்து, உடைகளை மாற்றி, மீண்டும் படுக்க வைத்து விடுவாராம். ஆனால், எதையும் சாப்பிடுவதோ, குடிப்பதோ மாட்டாராம். அப்படியே கொடுத்தாலும், வாய்க்குள் போகாதாம்.

தொடர்ந்து ஆறு மாதமாக துõங்கிக் கொண்டிருப்பதால், கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு வித பயமும் வந்து விட்டது. "நவீன கும்பகர்ணன் ஏன் இப்படி தொடர்ந்து துõங்கி வருகிறார்? ஏதாவது வியாதி இருக்குமோ, கோமா என்கிறார்களே, அதுவாக இருக்குமோ' என்று பயந்து போலீசுக்கு சிலர் சொல்லிவிட்டனர்.

போலீஸ் மூலம், சில டாக்டர்களுக்கு விஷயம் பரவ, அவர்கள் வந்து, சந்தன் சிங்கை போய்ப் பார்த்தனர். ஆனாலும், பரிசோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை. அரசு அதிகாரிகள் வந்து பார்த்து சொன்னபின், அதுபற்றி முடிவெடுக்கலாம் என்று இருந்து விட்டனர்.

"அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒரு மனிதனால், தொடர்ந்து ஆறு மாதம் துõங்கிக் கொண்டிருக்க முடியாது. இது மருத்துவ அபூர்வம். அதுவும், சாப்பிடாமல், எதுவும் குடிக்காமல், சிறுநீர், மலம் கழிக்காமல், ஒருவரால் இப்படி பலநாட்கள் துõங்க முடியாது' என்றார் டாக்டர் மனிஷ் சுக்லானி.

"ஒரு மனிதனால், பத்து நாட்களுக்கு மேல், சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. அப்படி இருப்பது சாத்தியமே இல்லை. அதனால், சந்தன் சிங் பற்றி முழுமையாக பரிசோதித்து தான் சொல்ல முடியும். எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் தான் மருத்துவத்திற்கு சவாலான இவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியும்' என்று இன்னொரு டாக்டர் அஜய்பால் சிங் கூறினார்.
ThanksBig Grininamalar.............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஆறு மாதமாக துõங்குகிறார் நவீன கும்பகர்ணன் கிச்சுக்கிச்சு' மூ - by SUNDHAL - 11-03-2005, 03:58 AM
[No subject] - by RaMa - 11-03-2005, 06:32 AM
[No subject] - by kuruvikal - 11-03-2005, 07:24 AM
[No subject] - by Rasikai - 11-04-2005, 08:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)