11-02-2005, 06:11 PM
இவோன் Wrote:வசம்பு குருவிகளின் கருத்துப் படி நீங்கள் காதலிக்கிறதும் காதலில்லை..இல்லாட்டி உங்களை ஒரு பெண் காதலிப்பதாக சொன்னீர்களே அதுவும் காதலில்லை. உங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இருமனங்களிலும் ஒருசமயத்தில் காதல் மலர வேணும்.. அப்பிடி மலர்ந்தால் தான் காதல்.. அதாவது நீங்களும் காதலை சொல்ல போக அவாவும் காதலை சொல்ல வரவேணும்..
மற்றும் படி.. நீங்க காதலிக்கிற பெண் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரையும் காதலித்திருந்தால்.. வேறொருவரை காதலிக்கிற பெண்ணை காதலிக்கிற நீங்கள்..
Quote:அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு??
நிச்சயமா..அதுதான் காதல்..ஒரு பெண்ணையோ ஆணையோ வற்புறுத்தி...இல்ல ஆசைகாட்டி... இல்ல கட்டாயப்படுத்தி...முன்னும் பின்னும் அலைஞ்சு...கட்டாயத்துக்கு உள்ளாக்கி வாறது காதலே அல்ல...! நீங்களும் விரும்ப அவளும் விரும்பனும்...அதில இயல்பு இருக்கனும்...அதுதான் காதல்..! மிச்சமெல்லாம் காதல் என்ற பெயரில் நடக்கும் வேடிக்கைகள்..! அப்படியான காதல் அருமையாகத்தான் வரும்.. காண்போர் எல்லாரிலும் பழகுவோர் எல்லாரிலும் கதைப்போர் எல்லோரிலும் எவ்வளவுதான் அழகு அந்தஸ்து தகுதி இருந்தாலும் காதல் வராது..! அவைக்கு காதலுக்கு அப்பால் பட்ட விடயங்கள்..! அங்கு சாதாரண நட்பு இல்ல பழக்கம் மட்டுமே காதலுக்கு இடையில் இருக்கும்...!
கலியாணம் முடிச்சு...அல்லது விட்டிட்டு வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்வதும்..ஒன்றைக் காதலிச்சு பிடிக்கல்ல...என்று இன்னொன்றைக் காதலிப்பவர்களும்.. காதலை ஆளுக்கு ஆள் மாத்திறவையும்...கண்ட இடத்திலும் வழிஞ்சு வலிஞ்சு போய் கட்டாயத்துக்கு உள்ளாக்கி காதலிக்கிறதும்...காதல் அல்ல...! சாதாரண பழக்கம்..காதலாக மலரலாம்...ஆனால் அது ஏதோ ஒரு கட்டத்தில் இரு மனத்திலும் நிகழ வேண்டும்..இயல்பாக...! அதுதான் காதல்...! அது மனிதருக்குள் உண்மையா இருந்தா காதல் ஒரு தடவைதான் வரும்..! அப்புறம் அந்த நினைவே மற்றைய கவர்ச்சி நிலைகளைத் தடுத்திடும்...! இது ஆளுக்கு ஆள் அவர்களின் வாழ்வியல் நடத்தையியல் உளவியல் சார்ந்து வேறுபடும்..! எனவே உண்மைக் காதல் என்பது எல்லோருக்கும் சரிவருமா என்பது சந்தேகமே..அதுதான் காதல் என்றதும் பலரும் பல வடிவங்களை தங்களுக்கு கொடுத்து தங்களைத் தேற்றி வாழப் பழகிக்கொள்கின்றனர்..! அதற்காக அவையெல்லாம் காதல் என்பதல்ல அர்த்தம்..! ஏதோ ஒரு கவர்ச்சி நிலை...அதன் அடிப்படையில் தங்களுக்கு தாங்கள் அதுக்கு காதல் என்று நாமமிட்டு கொள்கின்றனர்..அவ்வளவும் தான்..! அப்படியானவர்களிடம் தேவைக்கு அப்பால் அன்போ பாசமோ உண்மையாக இருக்க முடியாது..! உண்மையாக காதல் இருந்தால் அன்பு பாசம் எது கண்டும் குறையாது..பெருகும்..! கொண்டவரில் குறை கூடக் காணாது...! உண்மைக் காதலின் முன் பிரிவுக்கு இடமில்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

