11-02-2005, 03:19 PM
கருத்துக்கள் திசைதிரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் சம்பந்தப்பட்ட ஒரு விசயம் சொல்லிச் செல்கிறேன்.
சோவியத் உடைவுக்குப்பின் உடைவுக்கு முன் என்று காலம் அளப்பது சரியென்று படவில்லை. சோவியத்தின் உடைவு எந்தவித்திலும் கோட்பாட்டில் தாக்கம் விளைவிக்காது.
நிற்க,
புலிகள் இன்றும்கூட தங்கள் உறுதியுரையில் (சத்தியப்பிரமாணம்) "சமவுடமை, தன்னாட்சி, தமிழீழ விடுதலைக்காக" என்றுதான் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எடுக்கும் உறுதியுரையில் சொல்லும் சமவுடமைக்கு என்ன அர்த்தம்? (விளங்காமல் பாடமாக்கிச் சொல்கிறார்கள் எண்டு ஆரும் விளக்கம் தரமாட்டியளெண்டு நினைக்கிறன்)
அத்தோடு தமிழகத்திலிருந்து இடதுசாரியச் சிந்தனையாளர்கள் வன்னிவந்து கலந்துரையாடுகிறார்கள். போராளிகளுக்கு வகுப்புக்கள் எடுக்கிறார்கள்.;
இதெல்லாம் எதைக்காட்டுகிறது?
மாஸ்கோவில் மழை பெஞ்சா வன்னியில குடைபிடிக்கிறது எவ்வளவு பிழையோ அதைப்போலத்தான் நியூயோர்க்கிலயோ லண்டனிலையோ மழைபெஞ்சாலும் வன்னியில குடைபிடிக்கிறதும் பிழை. வன்னியில பெய்யிற மழைக்குத்தான் குடைபிடிக்க வேணும்.
என்னைப்பொறுத்தவரை, குடை சரியாகவே பிடிக்கப்படுவதாகப் படுகிறது.