11-02-2005, 02:38 PM
Quote:ஒருவரை நம்பிக்கையுடன் காதலித்தால் இன்னொருவரில் காதல் வராது வரவேண்டியா தேவையும் இல்லை என்றதை தான் சொன்னேன்
சரி.. A நம்பிக்கையுடன் B மீது காதல் வைக்கின்றார். உங்கள் இலக்கணப்படி காதலுக்குரிய இலக்கணத்தோடு காதலிக்கிறார். ஆனால் அந்த காதலை B ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது A என்ன செய்வார். அவர் நம்பிக்கையோடு தான் காதலித்தார். அதை B ஏற்றுக்கொள்ளாதது B இனுடைய தவறு இல்லை. அதே போல A இனுடைய தவறும் இல்லை.
கொஞ்ச காலத்தின் பின்னர் A மீண்டும் C யின் மீது காதல் கொள்ளலாம். இப்ப எது காதல் எது இனக்கவர்ச்சி B யின் மீதா அல்லது C யின் மீதா..இரண்டுமே காதலாக இருக்க முடியாதா.. அதாவது இனக்கவர்ச்சி கலந்த காதலாக..
B யின் மீது நம்பிக்கையாக காதல் வைத்திருந்தால் அந்த காதல் நிறைவேறியிருக்கும் என்று உல்டா விட வேண்டாம்.

