11-02-2005, 02:36 PM
kuruvikal Wrote:பிரபாகரன் 15 வயதிலை அரசியலுக்கு வந்தி்ட்டார் அது தெரியுமா..Eelavan Wrote:தலைவர் சோசலிசம் படித்துத் தான் போராட வந்தார் என்று நான் சொல்லவில்லையே.போராட ஆரம்பித்த பின் உலகத்தின் புரட்சிகளையும் போராட்டங்களையும் புரட்டிப் பார்த்தபின் தமிழீழ சோசலிசக் குடியரசு என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.ஆக அவர் தத்துவங்களைப் படித்துக்கொண்டு அவற்றைப் பின்பற்ற முயன்றிருக்கிறார் படிக்காமலேயே வீட்டுப்பாடம் பள்ளிக்கூடப்பாடம் என்று அலம்பவில்லை.
அண்மையில் கூட ஓரு பேட்டியில் மாவோவின் வழிகாட்டலைப் பற்றிக் கூறியிருக்கிறார்.அண்மையில் நான் தாயகம் சென்ற போது வீரம் விளைந்தது என்ற சோவியத்தின் மிகச்சிறந்ததொரு புத்தகத்தையும் இன்னும் சோவியத்தின் எழுச்சிக் காலப்பகுதியில் ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் மொழிபெயர்ப்புச் செய்திருந்ததாகக் கேள்விப்பட்டு வாங்கி வந்தேன்.
2005ம் ஆண்டுதான் சோவியத் உடைந்தது என்று கதைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நாங்கள் தாயகத்தில் மலசல கூடம் என்றுதான் பயன்படுத்துவோம்.பேரூந்து என்றுதான் சொல்வோம்.அலுமாரிக்கும் காருக்கும் இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் சீரியசுக்கும் ரயேட்டுக்கும் தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்கின்றன.
ஏதோ சின்னப்பிள்ளைகளெல்லாம் இதைப்படித்து தமிழ் கற்றுக்கொள்வதாய்ப் பினாத்தாதீர்கள்.
முதலில் என்ன சொன்னது என்பதைப் படிச்சிட்டு கருத்து எழுதுங்கோ...தெளிவில்லாமல் கருத்து பல இடங்களிலும்..அநாவசியத்துக்கு...! தலைவர் மாக்சியம் படிச்சிட்டு மக்கள் புரட்சிக்காக வெளிக்கிடல்ல... உங்களை விட தலைவரோடு நெருங்கிய அதே ஊரில் அவருக்கு படிப்பிச்ச ஆசிரியர் பல விடயங்களைப் பகிர்ந்திருக்கிறார்...! வெளிக்கிட்டாப்பிறகு படிக்கல்ல என்றும் சொல்லல்ல...! உங்களைப் போலத்தான் மற்றவைக்கும் பொது விடயங்கள் அறிய வாய்ப்பிருக்கு... எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரியும் என்று கதை சொல்லாதேங்கோ..! நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதல்ல தேவை...என்ன சொல்லுறீங்கள் என்பதே எமக்கு இங்கு தேவை...!
எங்களைப் பொறுத்தவரை சீரியஸ்...என்பது அழுத்தமாக இருக்கு பாவிக்கிறம்... முதலில் அலுமாரிக்கு காருக்கு தமிழ் கண்டு பிடிச்சு அங்கீகாரம் வாங்கிட்டு வாங்கோ மிச்சம் மாத்துவம்..! நீங்கள் மலசலகூடம் போறம் என்று சொல்லி ஊரில் போறனீங்கள் என்பது நகைப்பு இடமான விடயம்... நாங்கள் அறிய கிராமங்களில் கக்கூசு... நகரங்களில் ரொயலட் தான் அதிகம் பாவிக்கிறது தெரியும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 