11-02-2005, 01:23 PM
Quote:நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார்
முகம்ஸ் இது நல்லாவே இல்லை உங்கள் முகத்தார் வீட்டில் மறைமுகமாக எத்தனை கருத்தை முன்வைத்தீர்கள். சினிமா பற்றி முதியநடிகர்கள் பற்றி சிரிக்கவம் அரசியல் பற்றி சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வாறு உங்கள் முகத்தார் வீடு அமைந்திருந்தது. வாசித்து மிகவும் ரசித்து இதுபற்றி குடும்ப சகிதம் பேசினோம். உங்கள் ஆக்கம் ஒரு பேப்பரில் வந்தது அதையும் இங்கு குறிப்பிட்டிருந்தேன். உங்கள் தொடருக்கு எங்களைப்போன்ற ரசிகர்கள்
இருக்கிறார்கள். து}ற்றுபவர்கள் து}ற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும் நீங்கள் செய்வது சரி என்றால் தொடர்ந்து செய்வதில் என்ன தயக்கம். நீங்கள் எழுதிய தொடர்மு}லம் யாருக்கு என்ன நட்டம் வந்தது. சும்மா இப்படித்தான் சீசனுக்கு சீண்டிப்பாக்க ஆள் இல்லாவிட்டால் பேசுவார்கள் போல. அதை கணக்கில் எடுக்காது. உங்கள் தொடரை இங்கு தொடர வேண்டுகிறோம். தயவு செய்து நிறுத்தாதீர்கள்.
உங்கள் கருத்துக்கள் களத்தை எந்தவிதத்திலும் பதித்தா?? பிறகேன் உறுப்பினர்களின் பேச்சைக்கண்டு ஒதுங்குகிறீர்கள். நிர்வாகத்தில் இருந்து எதுவும் சொல்லவில்லையே முகம்ஸ். தாழ்மையான வேண்டுகோள். களத்திற்கு வருகிற எல்லா உறுப்பினர்களும் பார்வையாளர்களும் புளொக்ஸ் செல்வது குறைவு. அதனால் இங்கும் பிரசுரியுங்கள். தொகுப்பாக அது வரட்டும். அவர்கள் உறுப்பிர்கள் என்றால் அப்படித்தான் யாரையோ பேச பாவம் நீங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


